உரிமையைத்தானே கேட்கிறோம் என்றேன் நாங்கள் கொடுப்பதை எடுத்துப்போ என்றான் போதவில்லை என்றேன் உங்களுக்குத்தான் நாதியில்லையே என்றான் உரக்கக்கத்துவோம் என்றேன் என்றாலும் நீ நிராயுதபாணி என்றான் எங்களின் வரிப்பணத்தில்தானே வாங்கினாய் என்றேன் கஜானாவை நாங்கள்தான் பாதுகாக்கிறோம் என்றான் ஒருமித்த குரல் போதும் என்றேன் எங்கள் துப்பாக்கியில் குண்டு இருக்கிறதென்றான் உரிமையின் உண்மைக் குரல் கேட்கவில்லையா என்றேன் உங்கள் குரல்வளையை எங்கள் சட்டக்கயிறு நெறிக்கும் என்றான் சட்டம் எல்லோருக்கும் பொது என்றேன் சிறைச்சாலை இருக்கிறது என்றான் எங்கள் முறை வராமல் போகாதென்றேன் ஆட்சி எங்களுடையது என்றான் வாக்கு எங்களுடையது என்றேன் வாக்குப்பெட்டி அரசாணைக்கு உட்பட்டது என்றான் அரசை நாங்கள்தானே தீர்மானித்தோம் என்றேன் நாற்காலியை நாங்கள்தானே பிடித்திருக்கிறோம் என்றான் ஆளை மாற்றுவோம் என்றேன் ஆணையை அவ்வப்போது மாற்றுவோம் என்றான் பெரும் புரட்சி வெடிக்கும் என்றேன் துப்பாக்கிக்குள் குண்டுகளை நிரப்ப முனைந்துகொண்டிருந்தான். கோ.புண்ணியவான்.மலேசியா. Ko.punniavan@gmail.com
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)