பனிவிழும் மலர் வனம்- ரிஹானா நீர்வீழ்ச்சி டில்டிஸ் மலியுச்சியின் குளிர் கோடைகாலத்திலும் மைனஸ் பாகைக்குப் போகிறது. மலையுச்சியில் ஒரு சுரங்கம். மைனஸ் பாகை செல்சியஸ் எப்படியிருக்கும் என்பதைச் சுற்றுப்பயணிகளுக்கு உணர்த்த உண்டாக்கப்பட்ட சுரங்கம். இதனை மெல்லதான் நடந்து கடந்து வரமுடியும், தரையுயிலும் ஐஸ்கட்டிதான். சுற்றிலும் ஐஸ் கெட்டிதட்டிப்போய்க்கிடக்கிறது. 15 நிமிடம் ஆகிறது 150 மீட்டர் தூரத்தைக்கடக்க. உள்ளே புகுந்துவிட்டால் எப்போது வெளியே வருவோம் என்று பீதியடைந்துவிடுகிறோம்.. கடுங்குளிர். பலமுறை வழுக்கி விழுந்தவர்களைக் காணமுடிகிறது. நானும் கிடதட்ட விழுந்து விட்டேன். சமாளித்துக் கொண்டேன். பாதுகாப்பானதுதான் என்ற உணர்வு வெளியே வந்தவுடந்தான் ஏற்படுகிறது. மலையுச்சியிலிருந்து கீழே இறங்கி சூரிச் பட்டணத்தை அடைகிறோம். அங்கிருந்து றிஹானா நீர் வீழ்ச்சிக்குக் காரைச் செலுத்தினோம். உயரமான மலையும் காடும் உள்ள இடங்களில் நீர்வீழ்ச்சி இருப்பது சகஜம்தான். ஆனால் அது எவ்வளவு உயரத்திலிருந்து கொட்டுகிறது என்பதை மனம் கணக்குப் போட்டபடி இருந்தது. மருமகன் கூகலைப் பார்த்து ரிஹானா இது மிக...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)