Skip to main content

Posts

Showing posts from May 12, 2024

நகரமயமாதலில் பலியாகும் எலிகள்

       நகரமயமாதலில் பலியாகும் எலிகள் (அ.பாண்டியனின் கரிப்புத் துளிகள் நாவலை முன்வைத்து.                                                கோ.புண்ணியவான்            மு ன்னால் தமிழக முதல்வர் சி என் அண்ணாதுரை ஒருமுறை (1965ல்) மலேசியா வந்த போது ‘ பிற நாட்டில் தமிழர்கள் வசிக்கிறார்கள் , ஆனால் மலேசியாவில் மட்டும்தான் வாழ்கிறார்கள் ’ என்று சொன்னார். அப்போது மக்கள் கைதட்டி மகிழ்ந்தார்கள். ‘ அண்ணாதுரை சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் , . நாம் நல்லாத்தான் இருக்கோம்போல ‘ என்று கற்பிதத்தை விதைத்துவிட்டுச் சென்றவை அவ்வரிகள். ஏனெனில் அதைச் சொன்னவர் ஒரு பேரறிஞர்..தமிழ் கூறு நல்லுலகின் மதிக்கத்தக்க ஆளுமை. இன்றைக்கும் அண்ணா சொன்ன அந்த வரிகள் பொன்மொழிபோல மேடைகளில் கட்டுரைகளில் பயன்படுத்தப்படுகிறது. அவ்வார்த்தைகள் மக்கள் திரளை குஷிப்படுத்தவும் கை...