Skip to main content

Posts

Showing posts from October 25, 2009

கதவுகள் தாழிடப்பட்டிருக்கின்றன

கோ.புண்ணியவான்ராணியின் அப்பா ஆலமர முனீஸ்வரர் ஆலயத்துக்கு நேந்துவிட்ட கடா ஆடு, முனியம்மா வீட்டுக்கு கொல்லைப்புறம் மேய்ந்து கொண்டிருந்தது.போன டிஸம்பர் மாதம் எங்கோ மலாய் கம்பத்திலிருந்து, அதன் சொந்தக்காரன் சொன்ன கிரயத்துக்கே வாங்கிவந்து, இப்போது கொழு கொழுவென்று வளர்ந்து சாமிக்கு விட்டது என்ற பெருமையோடு, ‘சாமி குத்தமாகிவிடுமே’ என்று,யார் தொந்தரவுக்கும் ஆளாகாமல் சாவகாசமாய் சுற்றிக்கொண்டிருந்தது.ராணி ஆறாம் ஆண்டு அரசாங்க சோதனையில் ஏழு ஏ பெற முனீஸ்வரரின் கிருபை கிட்ட, நெருங்கிய உற்றார் உறவினரை அழைத்து, நல்ல நேரம் பார்த்து, மருதமுத்து பூசாரியை வைத்து, செய்ய வேண்டிய சடங்கு பூஜை புனஸ்காரமெல்லாம் செய்து, அதனை முனீஸ்வரனுக்கே தண்ணீர் தெளித்து விடப்பட்டது.அன்றிலிருந்து அந்த ஆடு தன்னிஷ்டம்போல் சுற்றிக்கொண்டிருந்தது.

.......................................................ஓய்வு நேரம் முடிய இன்னும் பத்து நிமிடங்களே பாக்கியிருந்தன.கொடுத்த இருபது நிமிடத்தில் கென்டினில் வரிசைப்பிடித்து நின்று வாங்கிச்சாப்பிடுவதற்குள் பத்து பதினோரு நிமிடங்கள் கடந்துபோய்விடுகின்றது.எஞ்சிய நேரத்தில்தான் கிளித்தட்டு விளையாட…

எனக்குத்தெரியாமலே எனக்குள்ளிருந்து என்னை

என்னை அடையாளப்படுத்தும் விதமாக என்

இவன் நட்ட மரங்கள்

நிமிர்ந்துவிட்டன

இவன் நடும்போது குனிந்தவன்

இன்னும்

நிமிரவே இல்லை

என்ற கவிதை எழுபதுகளின் இறுதியில் எழுதப்பட்ட கவிதை, முன்னிலும் உயிர்ப்போடு இயங்கி வருவது பெருமையின் நிழலாக பின்தெடர்ந்தாலும், அந்த நிழலே ஏதோ ஒர் உருவமாய் என்னைத்தொடர்வது போன்ற பிரம்மையால் நான் சிறுமையடையவும் செய்கிறேன். அக்கவிதை என்னுடைய ஐ டி என்கின்றனர் பலர். இது செவ்வியல் இலக்கியம் என்கிறார் டாக்டர் கார்த்திகேசு. முன்பின் அறியா ஒருவர் பினாங்கு பெர்ரியில் என்னைப்பார்த்தவாறு இருந்து பின்னர் தயங்கித்தயங்கி என்னை நெருங்கி, “நீங்கள் புண்ணியவானா? இவன் நட்ட மரங்கள் கவிதையை நீங்கள்தானே எழுதினீர்கள்,” என உணர்ச்சிவசத்தால் என் கைகளைப்பிடித்துக்கொண்டார்.(அப்போது அவர் பொன்னாடை வைத்திருக்கிறாரா என்று நோட்டமிட்டேன்) இப்படிச் சில நிகழ்வுகள். பல பிரபல எழுத்தாளர்களுக்கும் ஓரிரு படைப்புகள்தான் அவர்களை நினைவு கொள்ள வைக்கின்றன என்றார் பேராசிரியர், சாகித்திய அக்காதமி உச்சமன்ற உறுப்பினர் இரா மோகன். உதாரணத்துக்குக் கலாப்பிரியா எழுதிய

நீ அழகாய் இல்லாததால்

எனக்குத் தங்கையானாய்

என்ற கவிதையை…