மார்லின் மன்றோவும் பறக்கும் பாவாடையும். அந்த தேவாலயத்தை விரைவில் பார்க்க எவ்வளவு முயன்றும் முடியவில்லை. முன்னமேயே டிக்கட் பெற்றிருக்கவேண்டும். உள்ளே நுழைந்தால் அதற்கு அரைநாள் வேண்டும் சுற்றிப்பார்க்க. இருந்தாலும் அதன் வெளி வடிவம் புராதனமானது, பிரம்மாண்டமானது. ரோமன் கெத்தலிக் மற்ற கிருஸ்த்துவ பிரிவினைகளைவிட மிகப் பெரியது. அதற்கான அடையாளமாக இந்த லா செகாட்ரா பெமில்யா ஆர்வத்தோடு எம்பி நின்று விண்ணைத் தட்டிப்பார்க்க முனைகிறது. ஆதிகால ஆட்சியாளர்கள் தாங்கள் இருப்பை நிறுவவும், அடையாளமாகவும் பிரம்மாண்ட கட்டடங்களையும், கோட்டைகளையும் நிறுவும் முயற்சியில் மக்கள் நலத்தைக் கருதாமல் விட்டிருக்கிறார்கள் என்பது வரலாறு. சீனா இந்தியா போன்ற நாடுகளில் இந்த அதிகாரத்துவ அடையாளங்களைக் காணலாம். மருமகன் இந்த தேவாலயத்துக்குள் நுழைந்துவிடவேண்டுமென்று முயற்சி செய்துகொண்டிருந்தார். லா சகார்டா தேவாலய்த்தில் நீளும் வரிசை. இடையில் நான் சிறுநீர் கழிய கழிப்பறை தேடினேன். ஒரு பொதுக்கழிப்பறையைக் காட்டினார்கள். உள்ளே நுழைந்ததும் 2 பிரேங்க் கட்டவேண்டும் என்றார் ஒரு கருப்பினப் பெண். "2 ப...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)