Skip to main content

Posts

Showing posts from February 13, 2011

கோலகிட்டில் இடைநிலைப் பள்ளியில் படிவம் 3, 4, 5 மாணவர்களுக்கான சிறுகதைப் பட்டறை

இன்று 17.2.2011 வியாழக்கிழமை கோல கிட்டில் இடை நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு சிறுகதைப் பட்டறையை நடத்தி முடித்தேன் . மதிய 12.00 மணிக்குத் தொடங்கி 2.00 மணிவரை நடந்தது. அவர்கள் எனக்குக் கொடுத்த நேரம் போதுமானதாகவே இருந்தது. ஒரு சிறுகதைகான கூறுகளையும், கட்டமைப்பையும், செய்நேர்த்தியையும் சொல்ல நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தார் - முனைப்போடு செயல்பட்ட ஆசிரியை திருமதி கமலா. தமிழ் மொழி பாடக்குழுத் தலைவர் குமாரி மலர்க்கொடி, குமாரி ராஜேஸ்வரி, திருமதி பாரதி, ஜஸ்பிர் கோர் ஆகியோர் இறுதிவரை மாணவர்களுடன் அமர்ந்திருந்தனர். நான்கைந்து  நாட்களுக்கு முன்பிருந்தே என்னைத்தொடர்பு கொண்டு மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் சிறுகதைக்  கலையைப்பற்றிச் சொல்லித்தரவேண்டும் என்று அறிவுறுத்தி வந்தார். புரியும்படி என்ற வார்த்தையின் பொருளை நான் உள்வாங்கிக்கொண்டேனா என்பதில் அவர் கவனம் மையமிட்டிருந்தது. அவர் காட்டிய அக்கறை என்னை ஊக்குவித்துக்கொண்டிருந்தது. ஏற்கனவே பட்டறையின் செய்பொருள் என்னிடம் இருந்தமையால்  இலகுவாக அதை என்னால் நடத்த முடிந்தது. கெடா மாநிலத்தில் தமிழ் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் கொண்ட இடைநி...

கலகக்காரன்

கோ.புண்ணியவான் தனித்து அடையாளங்காணக் கூடியவராக இருந்தார் மாரிமுத்து. அவருக்குப் புனைப்பெயர் ஏதும் இல்லாதது வியப்பாகத்தான் இருந்தது. புனைப்பெயரிடுவதற்கான எல்லா தகுதியும் அவருக்கு இருக்கிறது. வெளிப்படையாக இல்லையென்றாலும் அன்னாரின் விசித்திர சுபாவத்துக்குள் புனைப்பெயருக்கான அடையாளத்தை உள்ளிருத்திக்கொண்டதாகவும் இருக்கலாம். “ தோ வந்துட்டான்யா” என்று உதட்டைப்பிதுக்கி ‘வரவேற்பதிலிருந்தே’ அவரைப்பற்றிய அங்கீகாரம் ஊரறிந்த ரகசியம். ஒரு நாற்பது வருடத்துக்கு மேலாகியும் இன்னும் மறையாத பாத்திரமாக , எனக்குத் தெரியாமலேயே எனக்குள்ளிருந்து தன் பாத்திரத்தைத் தானே மெருகேற்றி வார்த்துக்கொண்டிருப்பதன் ரகசியம்தான் எனக்குப்புரியவில்லை. இப்படிப்பட்ட மனிதரை மனதிலிருந்து எப்படி வெளியேற்றுவது ? என் போன்ற படைப்பாளிகளுக்கு வடிகால் உண்டு. படைப்பு வடிகால் இல்லாதவர்கதான் பாவம். ஆனாலும், எழுதித் தொலைத்துவிட்டால் நாற்பது வருடகால குடியிருப்பை வாபஸ் வாங்கிக்கொண்டு முழுமையாக வெளியேறிவிடுவாரா என்று உறுதியாய் சொல்லிவிடவும் முடியவில்லை. ‘அழுதுத்தீர்க்கத்தான் என் கதையைச் சொன்னேன், இப்ப மனசு லேசாயிடுச்சு ’ என்று சொன...