Dr.puspha -president of EWRF SUNGAI PETANI கடந்த 17ம் தேதி வெள்ளிக்கிழமை காலை ஏழு மணிக்கே என் உடல வறுத்தி தூக்கத்தைக் கலைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. பணி ஓய்வு பெற்றதிலிருந்து தாமதமாக எழுவது பழக்கமாகிப்போக நிர்ப்பந்தங்களின் நெருக்குதலில் வழக்கத்துக்கு மாறாக அதிகாலை துயிலெழல் நிகழ்ந்துவிட்டிருந்தது. எனக்கு மணி பின்னிரவு மூன்றிலிருந்துதான் தூக்கமே பிடிக்க ஆரம்பிக்கும். வாசித்துவிட்டு இணைய உலகில் அலைந்து திரிந்துவிட்டுப் போய்ப்படுக்கும்போது மணி இரண்டரையாகிவிடுகிறது. என்ன செய்வது உடலின் தேவை உடலே பூர்த்திசெய்துகொள்கிறது.. காலை 7.00 மணிக்கு எழுந்து 7.45க்கெல்லாம் பெர்பாடானான் தமிழ்ப்பள்ளியை அடைந்தேன். டாக்டர் புஷ்பா என்னை காலை வணக்கத்தோடு கைகுலுக்கி வரவேற்றார். என்னை அவரும் அவரை நானும் முதல் முதலாகச் சந்திக்கிற அந்தக்கா...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)