கோ.புண்ணியவான், மலேசியா Ko.punniavan@gmail.com என் அக்கம் பக்க வீடுகளில் குடியிருப்பவர்கள் சீனர்கள். எப்போதுமே ஓசையற்று கடந்துகொண்டிருக்கும் வீடு எங்களுக்கு இடது பக்கம் உள்ளது. முன்பு ஒரு குடும்பம் இருந்தது. இப்போது அந்தக்குடும்பத்திலுள்ள ஒரே மகன் அதில் குடியிருக்கிறான். இரவில் மட்டும் வருவான். பகலெல்லாம் பறவைபோல சுற்றித்திரிந்துவிட்டு தூங்குவதற்கென்றே அது அவனுக்குப் பயன்படுகிறது. எங்கள் வலது பக்க வீடு சதா கல கலவென்ற ஓசையோடு இயங்கிக்கொண்டிருக்கும். சீனர்கள் அதிகம் விரும்பி விளையாடும் மாஹ்ஜோங் சூது விளையாட்டு. துருப்புச்சீட்டு மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள். சதுரக்கட்டைகளால் எழுத்துக்களும் படங்களும் நிறைந்த சிறு சிறு துண்டுகளாலானவை. கலைத்துப்போட்டு அவரவருக்கு விழும் கட்டைகளை வைத்து தன் யூக அறிவைப்பயன் படுத்தி ஆடும் ஆட்டம். பல் சமயங்களில் இரவு பன்னிரண்டு வரை ஆட்டம் போய்க்கொண்டே இருக்கும். அதே தாமானிலிருந்து (வீடமைப்புப் பகுதியிலிருந்து) சீனப்பெண்களும் ஆண்களுமாய் வீடு கலகலத்துப்போயிருக்கும். வயதானவர்கள் அல்லது இல்லத்தரசிகள் வந்தவண்ணம் இருப்பார்கள் அந்த வீட்டுக்கு. இடது பக்க சலனம...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)