Skip to main content

Posts

Showing posts from September 13, 2009
எதேச்சதிகாரம்காரம் 1 புனையப்பட்ட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் கடவுள் தப்பித்தே வந்தார் ஒன்றுமே பலிக்காத பட்சத்தில் அவரை என்கௌண்டரில் கொள்வதென ஆள்பவனின் முடிவானது எதேச்சதிகாரம் 2 அவன் இல்லாத உலகில் ஒரு பத்து வருடம் வாழ ஆசை எனக்கு எதேச்சதிகாரம் 3 நீ இல்லாதபோது இருப்பதற்காகத்தான் இந்த ஏற்பாடென்றால் நீ இருக்கின்றபோதே இல்லாமல் இருப்பது ஏன்? எதேச்சதிகாரம் 4 உன் சிலைகள் உடைக்கப்படுவதற்காகவே மிக நேர்த்தியாய் கட்டப்படுகின்றன எதேச்சிதிகாரம் 5 வாரிசாக விட்டுப்போ மேலான உன் செருப்பை அது போதும். எதேச்சதிகாரம் 6 நீ செய்த கொலைகளுள் மிகக்கொடூரமானது குற்றுயிரும் கொலையுயிருமாய் நாள்கடத்தி சாகடித்த ஜனநாயகம்தான்.
நட்பின் மரணம் கோ.புண்ணியவான் நம்மிடையேயான நட்பு மலர்ந்து செழித்தபோதெல்லாம் எண்ணிக்கையற்ற வார்த்தைகள் ஊற்றென சுரந்தன ஒவ்வொரு சந்திப்பிலும் தித்திக்கும் பொழுதுகளில் வார்த்தைகளற்றும் திணறியிருக்கிறோம் நாம் சந்தித்த இடங்களிலெல்லாம் வார்த்தைகளின் வாசம் ஈரமாய் மிதந்தவண்னம் இருக்க ஒரு கரிநாளில் நட்பு மரணித்துகொண்டபோது எல்லாம் ஒரு நிலச்சரிவில் துர்ச்சம்பவமாய் புதையுண்டு மடிந்தேபோயின. நட்பின்போதில் நடனமாடிய வார்த்தைகளில் ஒன்றுகூட உயிர்பெற்று அபிநயிக்கவில்லை Ko.punniavan@gmail.com
புதிர் எப்போதுமே பிறகு சொல்கிறேன் என்ற தலைப்புச்செய்தியின் புதிர்த்தன்மையோடு புறப்பட்டுவிடுகிறார் ஊகித்தறியா ஆர்வத்தில் கோடிட்ட இடங்களை நிரப்பிய வண்ணம் கழிகிறது பொழுது அவரின் பிறகு சொல்கிறேன் ஒற்றைசெய்தியைத்தாண்டி என்னிடம் நிறையவே சேர்ந்துவிடுகின்றன புதிர்கள். கோ.புண்ணியவான். மலேசியா Ko.punniavan@gmail.com
கடைசி மணியின் அவலச் சப்தம் கோ.புண்ணியவான் கடந்த ஆண்டு இலக்கியச்சுற்றுலாவை முடித்துக்கொண்டு, சென்னை புக்செண்டரிலிருந்து என் வாசிப்பிற்கான நூல்களோடு, என் பேத்திக்கும் சில நல்ல கதைப்புத்தகங்களையும் வாங்கி வந்தேன்.அவள் பள்ளிக்குப் போகுமுன்பே எழுத்துக்கூட்டி வாசிக்க ஆரம்பித்திருந்தாள்.வாசிப்பதைத் துரிதமாக்கவும்,அவளின் சிந்தனை ஆற்றலைத் திறந்துவிட அந்தக் கதைப்புத்தகங்கள் சாவியாகப்பயன்படும் வண்ணம் தேடித்தேடி, மேலோட்டமாக வாசித்து வாசித்து நூல்களைத்தெரிவு செய்து வாங்கி வந்தேன். நூல்களில் பக்கத்துக்குப்பக்கம் வண்ண ஒவியங்கள் வரையப்பட்டிருந்தன.மிருகங்களின் படங்களும் பிராணியின் படங்களும் அவற்றுக்கான சூழலும் கிராபிக் முறையில் தீட்டப்பட்டிருந்தன. இந்தக்கவர்ச்சி என் பேத்தியை பெரிதளவில் ஈர்க்கும் என்ற நம்பிக்கை எனக்குள் இழை இழையான மகிழ்ச்சி நகர்ந்து என்னை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தது. இந்நூல்களை வாசித்தறியும் ஆற்றலை அப்போதைக்கு அவள் அடையவில்லை என்றாலும் நான் கையாளப்போகும் உத்தி அவளைக் கதைக்குள் இழுத்துக்கொள்ளும் என்ற எண்ணம் என்னிடம் இருந்தது. கதையின் முதல் கால்வாசிக்கதையை அவளுக்குப்புரியும்பட...
இடறிய விரல்கள் என் கவிதை நிரம்பிக்கொண்டிருந்த தாள் அதன் பிஞ்சுப்பிடுங்களில் கை மாறியது ஒரு பென்சிலும் அதன் வசமானது. கால் பரப்பி மெத்தென்றமர்ந்து சிரமப்பட்டு ஒருங்கிணைந்தன அதன் விரல்களில் சிக்கிய பென்சிலும் அசுரக்கிறுக்களுக்கு ஆளானது தாள் என்ன வரஞ்ச? ப்பூ என்றது அது உறுதியாய் பூ அல்ல வண்ணப்பென்சிலால் புழுக்களைத்தேடிப்பிராயும் குஞ்சுக்கால்கால் நகங்களாய் மேலும் திசை மறந்த கோடுகள். இப்ப என்ன வரஞ்ச? ப்பூ என்றது தயங்காமல் என் முகம் பாராத கூர்ந்த குவிமையத்தில் அது உறுதியாய் பூ அல்ல ஒருநாள் மாலை வேளையில் விருந்தினர் அறைச்சுவரில் அந்தக்கிறுக்கள் பிரேமில் தொங்கியது வீடே மணக்க என் கவிதையை வென்றவாறு! Ko.punniavan@gmail.com

களவாடப்பட்டுவிட்டன கவிதைகளும்

இலக்கை நோக்கிய நெடுஞ்சாலை பயணத்தில் கைக்குழந்தையுடன் காத்திருந்து பின்னுக்கு ஓடி மறைந்தும் கவிதையாய் மீள்பிரசன்னமாகிறாள் பேருந்துக்காக காத்திருக்கும் தருணத்திலும் இரு கால்களையும் விபத்தாலோ வியாதியாலோ இழந்த முகத்தோடு அன்னாந்து கையேந்தும் அவன் இடுப்புக்குக்கீழ் கால்களாய் கவிதைகள் முளைத்தன வியிற்றை நிரப்பிக்கொண்ட புத்தி சுவாதீனமற்ற இளம் தாயொருத்தி சிக்குப்பிடித்த தலையோடும் புராதன உடையோடும் தன்னிலை மறந்து திரிகிறாள் வாகனங்கள் சரசரக்கும் மேய்ன் சாலையில் அப்போதும் ஒர் கவிதை குழந்தையை மையமிட்டிருந்தது பள்ளிச்சீருடையோடு பையன் ஒருவன் தள்ளிக்கொண்டுவந்த மாணவி ஒலித்து வைத்திருந்த புத்தகப்பையைத்தேடி அலைந்தது இன்னுமொரு கவிதை பேரங்காடிப்பையோடு வாசலைதொட்ட வேளையில் ஓடிவந்த குழந்தை முகம்பார்த்ததும் மையமிட்டிருந்த கவிதைகள் சப்தமின்றி கசிந்து போய்விட்டன பேரங்காடிகள் களவாடிவிட்ட நோட்டுக்களைப்போல. கோ.புண்ணியவான். Ko.punniavan@gmail.com

மறக்கப்பட்ட ஆளுமை (அநங்கம் கட்டுரை)

எம் ஏ இளஞ்செல்வன் மாரடைப்பால் திடீர் மரணமுற்ற தகவல் கிடைத்தபோது நான் மலாயா பல்கலைக்கழக துணைவேந்தர் மண்டப வாயிலின் எழுத்துலக நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன்.டாக்டர் கிருஷ்ணன் மணியம்தான் என்னை நெருங்கி அவர் இறந்து போன செய்தியை என்னிடம் சொன்னார்.அவரின் வசிப்பிடத்துக்கு அருகாமையிலேயே வசிக்கும் எனக்கு கோலாலம்பூருக்குப்போன பிறகுதான் செய்திகிடைத்தது ஒரு துர்ரதிர்ஸ்டம்.மனம் பல்கலலைக்கழக மண்டபத்திலிருந்து அப்போதே விடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த எனக்கு ஒரு இலக்கியவாதியின் மரணச்செய்தி ஒரு இலக்கியப்பேராண்மையின் மரணமாகவே என்னைக் கருதவைத்தது. ஏனெனில் எம் ஏ இளஞ்செல்வனை ஒரு நண்பராக பார்த்ததைவிடவும்,ஒரு சக எழுத்தாளனாக அவதானித்ததைவிடவும்,சக தலைமை ஆசிரிய நண்பனாகப் பழகியதைவிடவும்,ஒரு இலக்கிய மேலாண்மையை பிரம்மிப்போடு அன்னாந்து பார்க்கும் மன நிலைக்கு நான் தள்ளப்பட்டிருந்தேன்.அவருடைய சிறுகதைகளை வாசித்த பிறகு அவரை அமானுடமாக பார்ப்பதை ஒரு தரிசனமாகவே மேற்கொண்டேன். அவருடைய சிறுகதைகள் முற்றிலும் வேறொரு தளத்தில் இயங்கி இந்நாட்டின் பிற சிறுகதைகளைவிட தனித்துக்காட்டும் தன்...