விடுதி நிர்வாகியோடு பொருதினோம். வெனிஸ் கடல் நகரின் அழகு கண்களிலேயே மிதந்தது. அங்கிருந்து மனம் வெளியேற மறுத்தது. ஆனாலும் 15 நாடகளில் சுற்றுலாவை முடித்துவிடவேண்டும். அடுத்து வெனிசிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கிளம்பவேண்டும். சுவிட்சர்லாந்தில் 2 நாட்கள் கழிப்பதாகத் திட்டம். அழகிய நிலப்பகுதிகளால் நிறைந்த ஊர். வெனிஸை முடித்துக்கொண்டு விடுதியை வந்து சேரும்போது இரவாகிவிட்டிருந்தது. லாபியிருந்து அறைக்குப் போகலாமென்றால் இருளில் பாதை புலப்படவில்லை. எங்கள் அறை அதே விடுதியின் வேறு இடத்தில் இருந்தது. எனக்குக் கோபம் மெல்ல உருவாகிக்கொண்டிருந்தது. ஒரு வட இந்தியர் விடுதியின் நிர்வாகி போல இருந்து நிர்வகித்துக்கொண்டிருந்தார். எனவே முதலாளிலிக்கு லாபம் தேடித்தந்து நல்ல பெயர் எடுக்க அவன் மின்சாரக் கட்டணம் உயராமல் பார்த்துக்கொள்கிறானாம். இந்தியர்கள் வெள்ளைக்கார நிர்வாகத்திலும் நேர்மையின்மையை கற்றுக்கொடுத்துவிடுவார்கள். நான் நிர்வாகியிடம் ஏன் வெளிச்சமில்லை, எப்படித்தான் அறையைத் தேடிப்போவது என்று கேட்டேன். ஏன் போக முடியாது நான் விளக்கு வெளிச்சம் இல்லாமல்தானே புழங்குகிறேன் என்றான். விளக்கு இல்லாமல் இர...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)