Skip to main content

Posts

Showing posts from January 2, 2011

நிகரற்றவன்

கோ.புண்ணியவான். எந்தப்பைத்தியக்காரனாவது நூல் வெளியீட்டுக்கு இருநூத்து எண்பது மைல் பயணம் செய்வானா? நான் போனானே! சரியாத்தான் இருக்கு! எழுத்தாளனப்பத்தி சமூக மதிப்பீடு. அரை மணிநேரம் நூலைப்பத்திப்பேச்ணும்னு மெனக்கட்டு போன் செய்து நான் ஒத்துக்கொண்டு , நூலையும் அனுப்பிவச்சிபிறகு, அழைப்பும் வந்து சேர்ந்திருந்தது. அக்கறையெடுத்து சீரா செய்யப்பட்ட அழைப்பு. அவன் கல்யாணத்துக்குக்கூட அப்படி அமஞ்சிருக்காது! மத்த வேலையெல்லாம் கெடப்பில போட்டுட்டு போவத்தான வேணும். பின்ன மைக் கொடுக்கப்போறாங்க இல்ல! போவாம ? பேசனவன் பெரிய எழுத்தாளனுமில்ல. அப்பப்ப பத்திரிகையில கவிதைய ‘பாத்த’ ஞாபகம். ஆம பாத்ததுதான். என் கதயவே ‘பாத்தேன் சார்னுதான’ சொல்றாங்க. பாக்கிற அளவுக்குதான் இருக்குன்னா வேற என்னாதன் செய்ய முடியும்? ‘படிச்சேன் சார் ...... அந்த சுப்பையா கேரக்டர என்னமா பின்னி எடுத்திருக்கீங்க? சொன்னீங்களே ஒரு உவமை -அவன் பாக்கெட்டுல இருந்து எடுத்த சிகெரெட்டு பழசாகி முனையில நெளிஞ்சி குஷ்ட்டரோகம் பிடிச்சவன் நடு விரல் மாறி இருந்திச்சின்னு..... லேசுல மறக்கிற உவமையா அது? முடிவு சார்..... உங்க முடிவு மனசிலயே நிக்கிது சார்.