(மலேசியத் தோட்டப்புற சூழல் சிறுகதை) ஆயக்கொட்டாயில நஞ்சானும் குஞ்சானுமா கெடக்கிற புள்ளங்கில கருக்கல்லியே வுட்டுட்டு போற தோட்டத்துச் சனங்க வேல வுட்டு வந்த , கடசி ஆளு புள்ளய தூக்கும்போது லயத்துக் காட்ல ‘மினுக்கிட்டான் பூச்சி கணக்கா, மினுக் மினுக்குன்னு மண்ணெண்ண வெளக்கு அமிஞ்சிரட்டுமா அமிஞ்சிரட்டுமான்னு கேக்குற மாறி எரியும். கித்தா மரம் வெட்டப் போறதுங்க மணி ஒன்னரைக்கெல்லாம் வந்திடுங்க -ஒத்த வெட்டுன்னா. வெயில் காயுறு நாள்ளயும் வெல்லென வந்துடுங்க. பாதி நேரத்துல மல பிடிச்சிருசின்னா சுருக்கா வந்திடுங்க. கித்தா மரம் வெட்றதிலியும் சிலது இருக்குங்க , சந்தடி இல்லாம் வேல முடிஞ்சி வூட்டுக்குப் போயி , சமச்சி, தொவச்சி , ஏறக்கட்டி வச்சிட்டு , குளிச்சி முழுவி மூஞ்சில திப்பி திப்பியா பகுடர பூசிக்கிட்டுத்தான் புள்ளய தூக்க வருங்க. அன்னிக்கி டபுல் வ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)