5. மனிதரை நாணிக்குறுக வைக்கும் மரங்கள் என் ஒன்றரை வயதுப்பேரன் நடக்கப் பழகியதிலிருந்து என்னை வீட்டுக்கு வெளியே இழுக்கும் தந்திரம் தெரிந்திருந்தான். அந்தத் தந்திரம் எனக்குச் சுகமானது. முதலில் அவன் வாசலுக்கு வெளியே போய் நின்றுகொண்டு என்னை தாத்தா தாத்தா என்று உரக்கக்கூவி அழைப்பான். இரண்டு முறைக்கப்புறம் அவன் குரலில் காத்திரம் இருக்கும். அவன் அழைப்பில் வசீகரிக்கப்பட்டவனாய் மெல்ல வாசலுக்குச் செல்வேன். வீட்டில் அத்தனை பேர் இரூக்க என்னைத் தேர்வு செய்யும் காரணம் என்ன? குழந்தைகள் எந்தக் கல்லூரியில் கற்றுக்கொள்கின்றன உளவியலை? நான் அவனை அழைத்துச்செல்வதில் முன்னோடியாக இருந்திருக்கிறேன். பரந்த வெளி ஊட்டும் சுகந்தம் அவனையும் ஆட்கொண்டிருக்கிறது. நான் வெளியே சென்றதும், என் செருப்பைக்கொண்டுவந்து, அதனைச் சேர்த்து வைத்து , அதை காட்டிப் போடச் சொல்வான். அத்தனை பேரின் செருப்பும் கலந்திருக்க , ஒரு முறைகூட தவறுதலாக எடுக்காமல் என்னுடையதைத் தேர்வு செய்யும் அறிவு அவனுக்குக் கிட்டியதன் மர்மம் புரியவில்லை. குழ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)