Skip to main content

Posts

Showing posts from January 9, 2011

வரலாற்றுப் பிழையும் வருங்கால இடரும்

மலேசியாவில் ஒரு சில மலாய் இலக்கிய ஆசிரியர்கள் நாட்டு வரலாற்றை மெத்தப்படித்தவர்கள். மூன்றும் நான்கும் எத்தனை என்று கேட்டால் எட்டு என்று பட்டென்று சொல்லிவிடுவார்கள். உங்கள் விடையில் ஒன்று கூடிவிட்டதே என்று கேட்டால்; ஒன்று தானே கூடிவிட்டது பெரிய வித்தியாசமில்லையே என்று புத்திசாலித்தனமாகப் பேசிவிடுவார்கள். வரலாற்றுப் பேராசிரியர்களிடம் போய் கூட்டல் கழித்தல் கேட்பது நம்முடைய தவறுதானே. ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு 2011 ஆண்டு புதிய வரலா¡ற்றுப் பாடத்திட்டத்தில் interlok என்ற நாவலை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். பதினேழு பதினெட்டு வயது மாணவர்க்கான கல்விபோதனையில் வரும் பாடத்தின் ஒரு பகுதியாக இந்த தகவல்கள் சிதைக்கப்பட்டு , ‘அரிய பெரிய’ வரலாற்றைத் தகவல்கள் நுழைக்கப்பட்டிருக்கிறது. இடைநிலைக்கல்வியில் நுழையப்போகும் மாணவர்க்குக் கொடுக்கக்கூடிய செய்தியா இது? பல்லின மாணவர்கள் பயிலப்போகும் இந்த இலக்கியப்பாடத்தில் இன சமய கலாச்சரிப் புரிதல்/ புரியாமை எந்த அளவுக்குப் போய்ச்சேரும் என்பதில் இப்போதே ஐயம் ஏற்படத்துவங்கியுள்ளது. அதன் பாதிப்பு பேராபத்தை விளைவிக்கும் தன்மையுடையது. இளைய சமூகத்தைத் தவறான கற...