சை. பீர் முகம்மது என்னும் இலக்கிய வம்பாளி. சை.பீர்முகம்மது வெள்ளைச் சட்டையில் .,எம் ஏ இளஞ்செல்வன் இல்லத்தில் ஒருமுறை சந்தித்துக் கொண்டபோது. நான் சை, பீர் முகம்மதுவை ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் சந்தித்தேன். நீரிழிவு நோயின் காரணமாக அவருடைய ஒரு கால் நீக்கப்பட்டிருந்தது அவர் சொல்லியே தெரிய வந்தது. உடலுறுப்பின் முக்கியமான ஒரு உறுப்பை இழக்கும்போது உண்டான கவலை அவரை எந்த அளவுக்குப் பாதித்திருக்கும் என்று என்னால் உணரமுடிந்தது. அவருக்கு ஆறுதல் சொல்லும் பொருட்டு அவர் இல்லத்துக்கே தேடிப் போனேன். அவர் காலை இழந்து சில மாதங்கள் கழிந்திருந்ததால் அவர் இயல்பாகத்தான் இருந்தார்.அதனால் நானும் என் சோகத்தை அவரிடம் கொட்டும் எண்ணத்தைக் கைவிட்டேன். எப்போதும் போலவே நடந்துகொண்டேன். அந்த இழப்பை தன் மனதளவில் மூடிக்கொண்டதைப் போல இருந்தது அவர் அந்தக் காலை கைலியால் மூடியிருந்தந்து, நோய்மையில் உள்ளவர்களிடம் அந்தக் குறிப்பிட்ட நோய் பற்றி பேச்சை வளர்ப்பது அந்த நோயின் எண்ணத்தைக் கடுமையாக்குவதற்கு ஒப்பானதாகும். இந்த ஞானம் நாம் கடுமையான நோயை எதிர்கொள்ளும்போது மட்டுமே தன்னிச்சையாகவே ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)