Skip to main content

Posts

Showing posts from February 28, 2016

ரெ.காவின் வெள்ளைப் பூனையும் கருப்புக் குட்டிகளும்- ஆணாதிக்க வன்மம்

                         கதை இரண்டு ரெ . காவின் வெள்ளைப் பூனையும் கருப்புக் குட்டிகளும் -   ஆணாதிக்க                                வன்மம் சமீபத்தில் வேலை தேடி அலையும் ஒரு வயதுப் பெண்ணை   எதேச்சையாக சந்திக்க வேண்டியிருந்தது . என்ன வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்று கீழிறங்கி வந்தாள் . அவளின் தோற்றம் கரிசனத்தை உருவாக்கிய வண்ணம் இருந்தது . அவளைச் சந்திக்கும் யாருக்கும் கழிவிரக்கம் பிறக்காமல் இருக்காது . அவளை மேற்கொண்டு விசாரித்த்தில் ஒரு மூன்று வயது குழந்தை இருப்பதாகச் சொன்னாள் . வயதான அம்மாவையும் பார்த்துக்கொள்ள வேண்டும் . ஆனால் கணவனோ பாதைமாறி குற்றச்செயலில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான் . எனவே வயிற்றுப் பிழைப்புக்காவது அவளுக்கு வேலை அவசியத் தேவையாகிறது . பெரும் பெரும் பட்டணங்களில் இவ்வாறான அபலைப் பெண்களை அதிகமாகவே எதிர்கொள்ள முடியும் . இவர்கள் ஒரு வகையில் ஏமாற்றப்பட்டவர்கள் . கனவுப் பருவத்தி l காதலுக்கு ஒரு த...

சிதையும் முன் அபிப்பராயங்கள் ( டாக்டர் ரெ.கார்த்திகேசு)

சிதையும் முன் அபிப்பராயங்கள் ‘ டாக்டர் ரெ . காவின் ‘ கொல்லவரும் புலி ’. கோ . புண்ணியவான் இந்த மார்ச் மாத ம் 20 ல் மலாயா பல்கலைக் கழகத்தில் நடக்கவிருக்கும் டாக்டர் ரெ . கா படைப்பின் மீதான இலக்கிய கருத்தங்குக்கு அவரின் சிறுகதைகள் குறித்தான கட்டுரை எழுத , ‘ இன்னொரு தடவை ’ சிறுகதைத் தொகுப்பைப் பலமுறை தேடியும் என் வீட்டு நூலகம் தேடிக் கொடுக்க மறுத்தது . வேலைக் காரியின் மேலும் வீட்டுக்காரியின் மேலும் கோபம் வந்தது . நூல்களைத் தூசு தட்டி அடுக்க வேண்டும் என்ற கட்டளைக்கு நூல்களை அடுக்களைப் பாத்திரங்கள் போல அடுக்கிவைத்து நல்ல பேர் வாங்கிக்கொண்டாள் வேலைக்காரி . பிற நூல்கள் கிடைத்துவிட்டன . ‘ இன்னொரு தடவையைப் ’ பல தடவை தேடியும் கிடைக்கவில்லை . சலித்து கைவிட்டுவிட்டேன் . கிடைத்த நான்கு தொகுப்புகளை வைத்து கட்டுரையை முடித்தேன் . ஆனால் எனக்கு நிறைவளிக்கவில்லை . எல்லாக் கதைகளையும் அலசி ஆராய வாய்ப்பில்லையே என்ற ஆதங்கம்தான் காரணம் . கட்டுரையையும் அனுப்பியாயிற்று . ஒரு மாதம் கழித்து ஒரு நண்பர் பேரவைக் கதைகள் நூல் வேண்டுமென்று கேட்டார் . அதைத் தேடப் போய் ‘ இன்னொரு தடவை ’ சிக்கியது . இங்கேதான் ...