கோ.புண்ணியவான் அன்றைக்கு நிஷாவுக்கு(அவள் நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டபோது சகுந்தலா என்ற அவளின் இயற்பெயரை நிஷா என்று மாற்றியவர் இயக்குனர் குருதேவ்.சகுந்தலா என்ற பெயரை அவளே மறந்து போயிருந்தாள்.அவளின் உறவினரோ, பால்ய தோழிகளோ அவளைத் தெருவில் பார்த்து “ஏய் சகுந்தலா,” என்று எதேச்சையாக அழைக்கும் பட்சத்திலும் அவர் யாரையோ கூப்பிடுகிறார்கள் போலும் என்று தன் போக்கில் நடையை தொடர்ந்தவளாய் இருப்பாள்.சினிமாவுக்குள் நுழைந்துவிட்ட காலந்தொட்டு அவள் நிஷா)பார்வதி வேஷம்.வசனம் ஏதுமில்லை.ஒரு மணி நேரத்தில் சூட்டிங் முடிந்துவிடும்.ஐம்பது ரூபாய் தருவதாக துணை நடிகை ஏஜண்டு ஆசைக்காட்டி அழைத்து வந்துவிட்டான்.ஒரு மணி நேரம் என்பது ஒரு பேச்சுக்காகச் சொன்னது. இரண்டு மணி நேரமகலாம்.ஏன் அதிக பட்சம் மூன்று மணி நேரமாகலாம் என்று தான் அவள் கணித்திருந்தாள்.ஆனால் ஐந்து மணி நேரத்தைக்கடந்தும் படப்பிடிப்பு முடியவில்லை.வசனம் இல்லை சும்மா சிவனின் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கவேண்டியதுதான்.புதிதாய் அறிமுகமாகும் ஒரு சுவை பானத்திற்கான விளம்பரப்படம்தான் என்று ஆசைகாட்டி அழைத்து வந்துவிட்டான்.ஐம்பது ரூபாய் அவள் ஆசையைக்கிளப்பிவிட்டிருந...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)