Skip to main content

Posts

Showing posts from February 6, 2011

சேலை கட்டிய மாதர்

கணினிக் காதலர் மலாக்கா முத்துக்கிருஷ்னன் தன்னுடைய வலைப்பூவில் http://ksmuthukrishnan.blogspot.com/ சில பழமொழிகளுக்கு அறிவுப்பூர்வமாக விளக்கம் அளித்திருகிறார். மூடநம்பிக்கையை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கும் நமக்கு இந்த விளக்கங்கங்கள் ‘ஆமாம் சரிதான்’ என்று ஆமோதிக்கச்செய்யும். அவருடைய விளக்கங்கள் பழமொழிகளை உள்வாங்கிக்கொள்ள உதவியாக இருக்கிறது. எப்போதுமே நமக்கு இருக்கும் சொற்ப அறிவைக்கொண்டு நம்மிடம் உலவும் தவறான கருத்தாக்கங்களுக்கு அறிவுப்பூர்வ முறையில் ஆழமாகச் சிந்தித்தால் அதற்கான விளக்கம் கிடைத்துவிடும். நாம் மூட நம்பிக்கைகளை நம் பாக்கெட்டுக்குள் பத்திரமாக பாதுகாப்புடன் வைத்தவாறே இருந்தால் நமக்குள் வெளிச்சம் வர அஞ்சும். நம்மைப் பிரித்து ஆள்பவர்களுக்கு எளிமையாகிவிடும். இப்போதுள்ள பாரிசான் அரசு செய்வதைப்போல! சேலை கட்டிய பெண்ணை நம்பவேண்டாம் என்ற பழமொழிக்கு ‘கள ஆய்வு’ செய்து விளக்கம் அளித்திருக்கிறார் நண்பர் முத்துக்கிருஷ்ணன். எப்போதோ ஒருமுறை ஒரு பெண் சேலை கட்டிக்கோண்டு பூ வைத்து போட்டிட்டு பவ்யமாக காட்சி அளித்து சோரம் போயிருக்கவேண்டும். அவளை நம்பி எமாந்தவன் இந்தப் பழமொழியை அவன் ...