ஜெயமோகனைச் சந்திக்கும் தருணம் வாய்க்கும் போதெல்லாம் மெல்லிய பதற்றம் ஏறி விடுகிறது எனக்கு. அவர் எழுத்து உருவாக்கிய பிரம்மாணடம் அவர் உரையாடலில் பொங்கி எழும் அறிவார்த்தம், இடைவிடாது அசுரத்தனமாக் எழுதும் ஆற்றல்,. நான் ரொம்ப பின்னால் இருக்கிறேன் என்ற தாழ்மை உணர்வு காரணமாக இருக்கலாம். இம்முறை மலேசியாவில் நான்காவது முறையாக சந்திக்கிறேன். அவரிடம் எப்படி உரையாடலைத் துவக்குவது என்ற முன்யோசனையோடு நான் என் ஊரான சுங்கைப் பட்டாணியிலிருந்து , கூலிம் தியான ஆஸ்ரமத்துக்குச் செல்கிறேன். கோலாலம்பூர் வல்லினம் நடத்திய குறுநாவல் சிறுகதைப் பயிலரங்கை முடித்துக்கொண்டு , ஜூலை 2 ம் தேதி சுங்கை கோப் பிரம்ம வித்யாரணயத்தில் நடைபெறும் இலக்கிய முகாமுக்கு, இன்னொரு இலக்கியப் பயிலரஙக்கை நடத்த வந்திருந்தார் ஜெ. வல்லின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் பதிவு செய்திருந்தேன். ஆனால் எங்கள் வீடமைப்புப் பகுதியில் கடுமையாக பரவி வந்த சிக்குன்குன்யா காய்ச்சலுக்கு நானும் பலியாவேன் என்று எதிர்பார்க்கவில்லை. சக மனிதர்களுக்கே நான் படைப்பாளன் என்று அறிமுகமாகாதபோது வெள்ளந்தி மனம் கொ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)