Skip to main content

Posts

Showing posts from September 11, 2011

அறிவுக்கு எட்டா ஆழிக்கூத்து

                            2004 டிசம்பர் 26ஆம் நாள் யாரும் எளிதில் மறந்துவிட முடியாத ஒருநாள். ஆழிக்கூத்து அரங்கேறி ஆயிராமாயிரம் உயிரைக் காவு கொண்ட கருப்புநாள். நான் மயிரிழையில் தப்பிப்பிழைத்த நாள். அன்று நானும் மனைவியும் மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் சுற்றுலா நண்பர்கள் 38 பேரும் சென்னையிலிருந்து ஊர் திரும்ப ஆயத்திமாகிக்கொண்டிருக்கிறோம். டிசம்பர் 25ஆம் நாளை முடிவுக்குக் கொண்டுவரும் முன்னர் கடைசி கடைசி என்று பொருட்கள் வாங்க பாண்டி பஜாரில் இருக்கும்போதே மறுநாள் நிகழவிருக்கும் ஊழிக்கூத்து அசம்பவிதத்துக்கான அறிகுறிகள் அப்பொழுது  நிகழ்ந்தது. என் மனைவி சேலை துணிமணிகள் வாங்க வேறு திசைக்கு போய்விட்டிருந்தாள். நானும் சில நண்பர்களும் நூல்கள் வாங்கக் கிளம்பிவிட்டிருந்தோம். இப்படி ஆளாளுக்கு ஒரு திசையில் பிரிந்து கிடக்கிறோம். கடையைத் தேடி அலைந்த நேரத்தில் நாங்கள் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் சாலையில் கிட்டதட்ட இரண்டாயிரம் எண்ணிக்கைக்கு மேலான மனிதக்கூட்டம் திம...