Skip to main content

Posts

Showing posts from November 7, 2010

மாட் ரெம்பிட்

கோ.புண்ணியவான், மலேசியா மலேசியாவில் மலாய் சமூக இளைஞர்களிடையே ஒரு கலாச்சார பேரழிவு சமீப காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்திய, சீன இளைஞரிடையே அதிகம் காணமுடியாத இந்த நவின கலாச்சாரம் மலாய் சமூகத்தின் தலைவர்களின் சிண்டு முடியை அடிவேர் ஆட்டங்காணும் வரை பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது. காவல் இலாகாவினர் இவர்களைக்கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி தவிக்கின்றனர். அரசியல் வாதிகளின் வியூகங்களைத் தவிடுபொடியாக்கியவண்ணம் உள்ளது இந்த இளைஞர்களின் போக்கு. பெற்றோர்கள் கண்களில் மண்ணைத்தூவி விட்டு இந்த இளைஞர்கள் நடத்தும் களியாட்டங்கள் ஒட்டுமொத்த சமூகத்தையே தலை குனிய வைத்துக்கொண்டிருக்கிறது. என்ன சமாச்சாரம் என்று தலையைச்சொறிவதை நிறுத்துங்கள். பீடிகையைக் கோட்டு ரப்பர்பால் மாதிரி இழுக்காமல் சொல்லிவிடுகிறேன். மாட் ரெம்பிட் என்பவர்கள் சாலை விதிகளை உடைத்தெறியும் மோட்டார் சைக்கில் கும்பல். உங்கள் மொழியில் டூ வீலர் அடாவடிக்கும்பல் என்று சொல்லலாம். இவர்கள் ஐம்பது அறுபது பேர் கூட்டமாய்க்கூடி மோட்டார் சைக்கில் ரேஸ் ஓடுவார்கள். பொது வாகனங்கள் ஓடும் சாலைதான் ஓடுதளம். கொஞ்சம் சமூகக்கரிசனம் உள்ள மாட் ரெம...