எனக்கு மீண்டும் மரண வாடை வீசத்தொடங்கியது. கொஞ்சம் பின்னகர்ந்து போனால் விளக்கமாகச் சொல்லலாம். 1. ஈப்போ ஜாலான் கிந்தாவில், ரேடியோ மலேசியாவுக்கு எதிர்ப்புறம், சீனர்கள் அதிகமாக வாழும் புறநகர்ப்பகுதியை ஒட்டிய கிந்தா ஆசிரியர் பயிற்சி கல்லூரியின், டொமெட்ரியின் மூன்றாவது மாடியில், நள்ளிரவைத்தாண்டிய மூன்றாவது ஜாமத்தின் ஒரு அந்தகாரப்பொழுதில் உறக்கம் என்னை அரக்கத்தனமாக இறுக்கமாக அணைக்கத்தொடங்கிய நேரம். குளோர் என்ற சத்தத்துடன் ஏழெட்டு பயிற்சி ஆசிரியர்கள் பொறுக்கிகளாக பரிமாணம் கண்டு அந்த டோமெற்றிக்குள் மிகுந்த ஆரவாரத்துடன் நுழைகிறார்கள்.வெண்கல கடைக்குள் கட்டுமீறிய காட்டு யானைகளைப்போல பிளிரளும் பீதியும் கிளப்பியவண்ணம் அவர்களின் நுழைவு தூக்கத்தைக் கீறிக் களைத்துவிடுகிறது.டோமில் இருக்கும் எல்லா டியூப் லைட்களையும் சுவிச் ஆன் செய்ததால் வேறு, ஒவ்வொன்றும் கேமரா பளீச்சென வீரிய வெளிச்சத்துடன் உயிர்த்துக்கொள்கின்றன.’சற்று முன்வரை இருளில் தோய்ந்திருந்த இடம் வேஷம் கலைந்து வெளிச்சப்பிரவாகம் கண்களை கூசச்செய்து உறக்கத்தைக் கலைத்துவிடுகிறது. பின்னிரவு மணி 1.46 வரை மறுநாள் ஒப்படைக்கவேண்டிய நன்னெறி, பயிற்றியல்...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)