ஸ்டாபிசாக்ரியா -பிணத்தோடு பாலுறவு நினைவுகளில் உள்ள பதிவுகளின் அலைக்கழிப்பே ஒரு தருணத்தில் படைப்பிலக்கியமாக உருக்கொள்கிறது. அந்த அலைக்கழிப்புகளின் துவக்கப்புள்ளி எது என்பது மர்மமான ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அதன் கரு மட்டும் மனதுக்குள் தீராத ஆட்டம் ஒன்றை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது. எத்தனை காலம் கடந்தாலும், சில காலம் அதனை மறந்தாலும், கலைமனம் மீண்டும் அதனை நம் நினைவு சுழற்சிக்குள் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது ஒரு சந்தர்ப்பத்தில். அது படைப்பாக பரிணாமம் காணும் வரை இந்த மன ஆட்டம் நடந்தபடியே இருக்கும். படைத்த பின்னர்தான் அந்த ஆட்டம் மோட்சம் கொள்கிறது. எனவே கலைமனம் கொண்டவனுக்குப் பதிவுபெற்ற நினைவுகள், படைப்பை நோக்கி உந்தித்தள்ளும் ஒரு விசை. சிறுகதைகள் பெரும்பாலும் அனுபவப் பகிர்வாகத்தான் படைக்கப்படுகின்றன. கலைநயம் மிகுந்திருப்பின் சாதாரண கருவைக் கூட சிறந்த கதையாக்க முடியும். சுஜாதா இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. தன் அழகியலால் சாதாரணத்துவத்தை அசாதாரணமான ஒன்றாக படைத்துகாட்டும் வல்லமை கொண்டவர். தன் வசீகர நடையால் வாசகனைக் காந்தம் கவர்ந்ததுப்போல தன்வசம் வைத்திருப்பார்...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)