புதுவையிலிருந்து புறப்பட்ட ஒரு தமிழ்ப்புயல்.(பேராசிரியர் மு.இளங்கோவன்) 2003 ம் ஆண்டு என் நினைக்கிறேன். கெடா மாநிலத் தமிழ் ஆசிரியர் சங்கத்தோடு இணைந்து சிங்கப்பூரில் நடந்த உலகத்தமிழாசிரியர் மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். போதானா முறைகளில் நவீன மாறறங்கள் நிகழ்த்தப்படவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்ட மாநாடு அது. மூன்று நாட்கள் நடந்த அந்த ஆய்வரங்கில் ஒரு அமர்வு முடிந்து வெளியே வந்த தருணத்தில் இன்னொரு ஆய்வரங்கிலிருந்து சிரிப்பொலி கேட்டுகாண்டிருந்தது. என்னதான் நடக்கிறது என்று நானும் உள்ளே நுழைந்தேன். முப்பது வயதுக்குள் இருக்கும் ஒரு இளம் பேராசிரியர் நாட்டுப்புறப்பாடல் தலைப்பில் பேசிக்கொண்டிருந்தார். நுழைந்த ஒரிரு நிமிடத்தில் நான் அவரின் பேச்சில் லயிக்கத்துவங்கினேன். நாட்டுப்புறப்பாடலைப் பாடியவாறே தன் பேச்சாற்றலால் அனைவரையும் தன்வயப்படுத்திக்கொண்டிருந்தார். அந்தச் சந்திப்பு முடிந்து 2007ல் நான் புதுவையில் ஒரு இலக்கிய நிகழ்வில் மீண்டும் அவரைச் சந்திக்கும் நல்வாய்ப்பு நேர்ந்தது. “சிங்கப்பூரில் பேசிய இளங்கோவந்தானே நீங்கள்” என்றேன். ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)