நிராகரித்தலும், நிராகரிக்கப் படுதலும்- பிச்சைப் பாத்திரம் கதை ஒரு பார்வை பாவையின் ‘பிச்சைப் பாத்திரம் சிறுகதை மலேசியாவில் அரிதாக சொல்லப்படும் கதை வகைமையில் ஒன்று. ஏறத்தாழ துறவறமே இல்லறத்தைவிட மேலானது என்று சொல்ல வந்த கதை. கிட்டதட்ட 100 விகிதம் நடைமுறை வாழ்க்கையையைத் திரும்பத் திருமப படம்பிடித்துக்காட்டும் வரட்சியான கதைக் களத்திலிருந்து சற்று விலகி துறவு பற்றிப்பேச வந்ததை சற்று ஆறுதல் தருகிறது. அதற்காகப் பாராட்டுகள். ஏகபோக சொத்துக்கும் அதிபதியாகப் போகிறவனின் மகன் துறவறத்தில்தான் தான் முழுமையடைவதாகச் சொல்வதை நிதானமாக , சொற்ப வார்த்தைகளுக்குள் சொல்வது வாசகமனத்தை கவர்கிறது. ஆனால் மகன் துறவறம் மேற்கொள்வதற்கான பின்புலக் கற்பிதம் எங்கேயும் காட்டப் படவில்லை. வாசகனே இட்டு நிரப்பிக்கொள்ளட்டும் என்று வெற்றுக்கோடுகளை விட்டிருக்கலாம் கதாசிரியர் .ஆனாலும் சொல்ல வேண்டியதைச் சொல்...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)