திரு ரவிச்சந்திரன் ஆசிரியரோடு திருமதா மருதா மீனாட்சியோடும் மாணவர்களோடும் பல சிறுகதைகள் வாசித்துவிட்ட அனுபவத்தில் எழுதுவதற்கும், புதிதாக சிறுகதை செய்முறை உள்ளீடு மட்டுமே தெரிந்துகொண்டு எழுதுவதற்கும் சில வேறுபாடுகள் உண்டு. சிறுகதைகள் வாசித்துவிட்டு அதன் உள் கட்டுமானங்களைச் சன்னஞ்சன்னமாக உள்வாங்கிப் புரிந்துகொண்டு எழுதும் அனுபவ முறை சில சமயங்களில் தேர்ந்த சிறுகதை எழுத்தாளர்களை உருவாக்கிவிடும். அவர் அதன் நுணுக்கங்களை அதன் வாசனை அறிந்து எழுதிவிடுபவர்கள் நல்ல கதாசிரியராக ஆகிவிட வாய்ப்புண்டு. வாசிப்பு மேலோட்டமாக செய்துவிட்டு எழுத வருபவர்கள் அதில் வெற்றி அடைவது கடினம். பலர் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தாலும் கதைக்குள் நுழைந்து அதன் சிற்ப வேலைப்பாடுகளை நுணுகி அவதானிக்க மாட்டார்கள். அவர்கள் அதனை ரசித்துப் படித்து உணர்ச்சிவசப் படுபவர்களாக இருப்பாரகள். எனவே அவர்கள் எழுதும் சிறுகதை அனுபவப் பகிர்வு நிலையிலேயே நின்றுவிடும். Add caption மேலே ஷா அலாம் TTDI இடைநிலைப் பள்ளி கீழே சுங்ைைசோ இடைநிலைப் ப்ளள்ளி...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)