Skip to main content

Posts

Showing posts from December 22, 2019

பயணக் கட்டுரை 4 : இருபதும் எழுபதும்

4. வீரமங்கை வேலுநாச்சியார் 2-ம் நாள் காலை டாக்டர் மிமியின் வீட்டில் மிமி யின் அம்மா பரிமாறிய காலை உணவு மதியும் வரை பசிக்காது போலிருந்தது. கனமான    உணவு. பூச்சுருள் போன்ற மிருதுவான இட்லியும் பொருத்தமான புதினா சட்னியும் சுவையைக் கூட்டும் காரமான கோழிக் கறியும் பரிமாறப்பட்டது. மீண்டும் அவர்கள் காரிலேயே மதுரையை நோக்கிப் பயணம். இம்முறை மிமி யின் தாய் எங்களோடு இணையவில்லை.விடுமுறை தொடங்கிவிட்டதால் பேரனோடு சென்னை கிளம்பி விட்டார்கள். ஆனால் மிமி யின் தந்தை‌ டாக்டர் வல்லபாய் சிவகங்கையில் எங்களோடு இணைந்து கொள்வதாகத் திட்டம். அவரும் டாக்டர். அறுவை சிகிச்சை நிபுணர். மலேசியா சிகாமாட் மருத்துவ மனையில் 8 ஆண்டுகள் பணியாற்றியவர். பின்னர் ஏய்ம்ஸ்ட் பல்கலையில் இரண்டு ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றினார் . மலேசிய பண்பாடு, அரசியல் அத்துப்படி அவருக்கு. பல மலாய்ச்சோற்கள் தெரிந்து வைத்திருந்தார். இந்தியாவின்   தொன்ம வரலாறு, தற்காலத் தமிழ் இலக்கிய அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சிறுவயதிலிருந்து வாசிக்கும் பழக்கமுள்ளதால் அவரோடு உரையாடுவது என் அறிவுப்பெருக்கத்துக்கு இன்பமாய் அமைந்தது. போகும் வழிய

பயணக் கட்டுரை 3 - இருபதும் எழுபதும்

3. விழுமிய மறுப்பு      டாக்டர் மிமி-யின் வீட்டைக் கண்டுபிடிக்கச் சற்றே சிரமமாகத்தான் இருந்தது. நான் ஹரியிடம் சொன்னேன், நாம் தமிழ் நாடு வந்துவிட்ட தகவலை அழைத்துச் சொல்லிவிட்டால் அவர்கள் பதற்றமில்லாமல் இருப்பார்கள் என்று. முதன் முதலாக ஒருவர் நம்மை வரவேற்கக் காத்திருக்கிறார் அவருக்கு பதற்றம் தரவேண்டாம் என்றேன். வேண்டாம்,  அவர்களுக்கு நாம் இன்ப அதிர்ச்சி கொடுப்போம் என்றார் . ஆனால் அப்போதே ஒரு மணி நேரத் தாமதம் உண்டாகிவிட்டது . இதோ இதோ என்று வந்துவிட்டோம் என்று ஆட்டோ ஓட்டுனர் கூறிக்கொண்டே இடத்தைத் தவறவிட்டு கண் கொண்டே இருந்தார். மாதாகோட்டையில் கிருஸ்துவ நண்பர்கள் அதிகம் போல தோன்றியது. கிரிஸ்துமஸ் பெருநாள் கொண்டாட்டக் கலை கூடியிருந்தது. அங்கே, ஓர் அழகிய தேவாலயம் மாதாகோட்டை என்ற ஊர் பெயருக்குப்  பொருத்தமாக அமைந்திருந்தது. ஒருவழியாக அவரது வீட்டைக் கண்டுபிடித்ததில் நிம்மதியாக இருந்தது. மாதாகோட்டை சேவேரியர் தெருவில் ஒரு வீட்டின்முன் இறங்கி மருத்துவர் மிமி-யின் இல்லம் குறித்து விசாரித்தோம். அவர், எதிர்வீட்டைக் காட்டினார். எதிர் வீட்டின் மேல் தளத்தில் மருத்துவர் மிமி கையசைத்துப்  புன்னகைத்தப

பயணக் கட்டுரை 2 - இருபதும் எழுபதும்

2.  நயன்தாரா வந்தார். அரைநொடியில் அந்தப் பதற்றம் தீர்ந்தது. நான் சொன்னேன், “ஹரி, குரல்வளையைக் கடிச்சு உறிஞ்சிடுவேன்” பதற்றம் முழுவதும் வற்றாமல் எஞ்சியிருந்த காரணத்தால். அவர் , “சார்...” என்றார் சிரித்துக்கொண்டே . நல்லவேளை நான் தமிழ்நாட்டுப் பயணம் மேற்கொள்வதால் சைவமாக இருந்தேன். அதனால் ஹரி தப்பித்தார். நானும் கடித்துக் கொலை செய்த குற்றத்திற்காகச்சிறைக்குச் செல்வதிலிருந்து தப்பித்தேன். இன்னொரு வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும். பயணத்தின் முந்தைய நாளான 21-ஆம் திகதி, பினாங்கு விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மகனது வீட்டிற்குச் சென்றுவிட்டேன். மறுநாள் அதிகாலை 3 மணிக்கு விமான நிலையத்தில் இருக்க வேண்டும். ஹரியும் நள்ளிரவு 1 மணிக்கெல்லாம் மகன் வீட்டிற்கு வந்துவிட்டிருந்தார். எனக்கு விடியற்காலை மூன்று மணிக்குத்தான் உறக்கம் தழுவுவது இயல்பாகிப் போனது. மூப்பின் காரணம். நோய்மையும் உற்ற தோழனானதும்தான். விடிய விடிய இலக்கியம் பேசிக்கொண்டிருந்துவிட்டு நேரம் ஆனதும் விமான நிலையம்  கிளம்பிவிட்டோம். வெகு நேரம் விழித்திருந்ததால், பசி எடுத்து விட்டது.  ஆதலால், விமான நிலையத்தில் உணவுக்காக அன  லைந

பயணக் கட்டுரை 1 - இருபதும் எழுபதும்

1. தடை இருபதுக்கும் எழுபதுக்கும்  வெகுதூரம். ஒரு மிகப்பெரிய தலைமுறை இடைவெளி உண்டாகும் வயது. இந்த இடைவெளியை இல்லாமல் ஆக்குவது , இலக்கியப் பிணைப்பு மட்டுமே. நான் என்ன சொல்ல வருகிறேன் என்று இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருந்தால் இலக்கியத்தில் உங்களுக்குப் பரிட்சயம் இருந்திருக்கும். அப்படி இல்லையென்றால்... தலையைக் கொஞ்சம் சொரிந்துக்கொள்ளுங்கள்.இது ஒரு பயணக் கட்டுரை என்பதை மேலேயே குறிப்பிட்டுவிட்டேன். எனவே, இருபதும் எழுபதும் இணைந்து போகும் பயணமிது. கடந்த மார்ச் மாத முடிவிலிருந்து எங்கேயும் பயணம் செய்யவில்லை. பாதங்கள் அரித்துக் கொண்டே இருந்தன. எங்காவது போக வேண்டும். கொஞ்சம் வீட்டுச் சூழலிலிருந்து வேறிடம் தேடிப் போகவேண்டும் என்று உள்மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. பயணம் நம்மைச் சுத்திகரிக்கும். வாழ்வனுபவச்சேகரம் அதிகரிக்கும். ஆன்மா புனிதப்படும். வேறு மனிதர்கள், வேறு இடம், புதிய காற்று, புதிய சூழல், இவற்றை அனுபவிக்க வேண்டும். வரலாற்றுப்பூர்வமான இடங்களை இன்னும் ஆழமாக அறிந்துகொள்ள வேண்டும். ஆனால், யாராவதொருவரின் துணையோடுதான் போகவேண்டும் என்ற நிர்பந்தம் எனக்கு.  தனியாகப் பயணம் செய்து அனுபவம