Skip to main content

Posts

Showing posts from August 20, 2017

குப்புச்சியும் கோழிகளும்- சிறுகதை

குப்புச்சியும் கோழிகளும்- சிறுகதை தோட்டங்களின் எல்லை என்றும் சொல்ல முடியாமல், காட்டின் அடிவாரம் என்றும் சொல்ல முடியாத மனித நடமாட்டமே அற்றுப் போன அல்லது தபால் இலாகாவின் முகவரிப் பதிவேட்டில் துருவித் துருவித் தேடினாலும் காணப்படாத பகுதியில்தான் குப்புச்சி வசித்து வருகிறாள். அவள் கணவன் உயிராய் இருக்கும் போதே இந்த இடத்தை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு செத்துப் போய் விட்டான். அவன் செத்துப் போன செய்தி கூட இவளை முழுசாய் வந்து சேரவில்லை. வேலையை ஒழுங்காகச் செய்ய முடியாத காரணத்தால், இடம் விட்டு இடம் பெயரும் இவள் கணவன், ஒரு நாள் ஆள் அரவமில்லாத ஓர் இடத்தில் ஏதோ இடித்து உதவிக்கு ஆள் இல்லாமல் நிர்க்கதியாய் உயிர் விட்டிருப்பான் என்ற ஆரூடம், சாவு வீட்டில் பேசப்பட்டிருந்தது. நாலு பேர் கூடிவிட்ட இறப்பு வீட்டில் சாங்கியத்துக்காக அழலாம் என்றாலும், அந்தப் பாழாய்ப் போன கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் கூட உதிர்க்க முடியாமல் போனது அவளுக்கு மட்டும் அதிசயமாய்ப் படவில்லை. வேலைதேடி தனியே விட்டுப்போனப்பிறகு  குப்புச்சிக்கு என்ன நடந்தது? அவள் எப்படி இருந்தாள்? என்ன ஆனாள்? அவளை விட்டுப் போன