Skip to main content

Posts

Showing posts from September 15, 2024

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் நவீன எழுத்துலகின் ஆளுமை

  எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் நவீன எழுத்துலகின் ஆளுமை எஸ் , ராமகிருஷ்ணன் மலேசிய வருகையை முன்னிட்டு இப்பதிவு   நவீன தமிழ் எழுத்துலகின் தவிர்க்க முடியாத ஆளுமை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள். இன்றைக்கு இருக்கும் தமிழின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவர். எஸ்ரா எழுதத்தொடங்கிய 1984 முதல் இன்றுவரை இடைவிடாமல் எழுதிவருகிறார். அவருடைய முதல் படைப்பு ‘ பழைய தண்டவாளம் ’ என்ற சிறுகதை கனையாழி மாத இதழில் வெளியாகித் தன் படைப்புலக நுழைவை தகவமைத்தார். அதற்குப் பின்னர் அவரை வலிமையாக அடையாளம் காட்டிய ‘ துணையெழுத்து ’ என்ற இலக்கியக் கட்டுரைத் தொடர் ஆனந்த விகடன் வார இதழில் வெளியாகி பரவலான வாசக கவனத்தைப் பெற்றது , கதாவிலாசம் , தேசாந்திரி , கேள்விக்குறி ஆகிய கட்டுரைத் தொடர்கள் தொடர்ந்து ஆனந்தவிகடன் இதழ் பிரசுரித்தது .இலக்கிய உலகின் மிகப்பெரிய ஆளுமையாக தன்னை நிறுவிக்கொண்டே இருந்தார். கட்டுரைத் தொடர்கள் அவரின் தொடக்க கால எழுத்து வகைக்குச் சான்று என்றாலும் , அவர் புனைவெழுத்திலும் தன்னைத் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டே இருந்தார். நூற்றுக் கணக்கான சிறுகதைகள் இடைவிடாமல் எழுதி வந்தாலும். இலக்கியத்தி...