Skip to main content

Posts

Showing posts from May 2, 2010

பொறுமையாக இருங்கள்

நீங்கள் எதிர்பார்க்கும் என் பதில்கள் விரைவில் அரங்கேறும் தவணை முறையில் மகனின் திருமண வேலையாக இருக்கிறேன் முடிந்ததும் சந்திப்பேன்

புதிர்

எப்போதுமே பிறகு சொல்கிறேன் என்ற தலைப்புச்செய்தியின் புதிர்த்தன்மையோடு புறப்பட்டுவிடுகிறார் ஊகித்தறியா ஆர்வத்தில் கோடிட்ட இடங்களை நிரப்பிய வண்ணம் கழிகிறது பொழுது அவரின் பிறகு சொல்கிறேன் ஒற்றைசெய்தியைத்தாண்டி என்னிடம் நிறையவே சேர்ந்துவிடுகின்றன புதிர்கள். கோ.புண்ணியவான். மலேசியா Ko.punniavan@gmail.com

புலவர் வேந்தர்கோனின் வரலாற்றிலிருந்து பிரிக்க இயலாத சில பக்கங்கள்

கோ.புண்ணியவான் கூலிம் பட்டணத்திலிருந்து புலவர் வேந்தர்கோன் ஜொகூர் பாசிர் கூடாங் ஊருக்குக் குடிபெயர்ந்போது அவர் சுப்பிரமணியத்திற்கு தர வேண்டிய கடன் தொகை மலேசிய ரிங்கிட் 1240. மலிகைக்கடைக்கு 230. வாடகை வீட்டுக்கு மூன்று மாத பாக்கி. ஒரு மாதத்துக்கு முன்னூறென்றால் மூன்று மாதத்துக்கும் சேர்த்து 900 ஆயிற்று. அவரின் ஆதர்ஸ வாசகர் ஒருவருக்கு 80 வெள்ளி. அவர் வீட்டைக்காலி செய்து ஒரு வாரம் கழித்தே சுப்பிரமணியத்துக்கும் மற்றெல்லா கடன்காரனுக்கும் வெளிச்சமானது. அவர் குடி பெயர்ந்தது தெரிய வந்து அதிர்ச்சியடைந்துபோனார்களே ஒழிய எங்கே போனார் என்று தெரியாமல் போனது வேதனையளித்தது.. அவ்வப்போது அவரைப்பற்றி வரும் பத்திரிகை செய்திகளைப் பார்த்தால்தான் ஆயிற்று. மற்றவர்களுக்கு இன்னும் தெரியாது. கடன்காரர்கள் எல்லாருமே இளிச்சவாயன்கள் அல்ல. கடன் கட்டிமுடிக்கும் வரை விட்டேனா பார் என்று விரட்டிப்பிடித்தவனும் உண்டு. ஒரு முறை குடியிருந்த ஊரைக் காலி செய்துவிட்டு வேற்றூருக்கும் போனபோது விபரமான கடன்காரன் ஒருவனுக்கு ஒரு செய்தியைப் பத்திரிகையில் பார்க்கிறான். பத்திரிகை செய்தி பின் வருமாறு. கடந்த ஆண்டு மறைந்த பெரும்பு...

நீ அண்ணாந்து பார், நான் செம்மாந்திருப்பேன்

நீ ஆழ்கடலுக்குள் மூழ்கி மூச்சடக்கி முத்து கொண்டு வா நான் கப்பலில் மதுக்கோப்பையை கையிலேந்தியபடியே அதை வாங்கிக்கொள்கிறேன் நீ பாதாள சுரங்கத்திலிறங்கி வைரம் கொண்டு வா நான் நான் பாதுகாப்பு வளையத்துக்குள் பத்திரமாய்க் காத்திருக்கிறேன் நீ மரத்தில் தாவி மது இறக்கி வா நான் மாதுவோடு என்னை மறந்திருப்பேன் நீ அட்டைக்கும் கொசுவுக்கும் ரத்த தானம் செய்து ரப்பர் கொண்டு வா நானென் பாதங்களில் முள் பாயாதபடி பார்த்துக்கொள்கிறேன் நான் என் பிள்ளைகளை செல்வச் சீமானாக்குகிறேன் உன் பிள்ளையை உனக்கான அடுத்த வாரிசாக்க உறுதி தருகிறேன் நீ பழம்கொண்டுவா கண்டிப்பாய் உனக்கு நான் கொட்டை தருகிறேன் “ந்தா மேதின பூ வைத்துக்கொள் வாழ்த்துகள்.......” கோ.புண்ணியவான்