வணக்கம், கையறு நாவல் கிடைக்குமிடம்: கோ.புண்ணியவான் 0195584905 மலேசியா. என் கையறு நாவல் தொடர்பாக எழுதப்பட்ட விமர்சனங்களை இங்கே பதிவு செய்ய நினைக்கிறேன். குறைவான எண்ணிக்கையிலே கையறு நாவலை அச்சிட்டமையால் அவை தாமதமாகக் கேட்போருக்குக் கிடைக்காமல் போகலாம்.எனவே இப்பதிவுகள் இந்நாவல் தொடர்பான விடயங்களை முன்வைத்து நாவல் வாசிக்க ஆர்முள்ளவர்களைத் தூண்டும் நோக்கமுடையவை என்ற காரணத்தால் இவற்றை இங்கே பதிவு செய்கிறேன். தபாலில் குறைந்தது 150 நாவ்லகளை அனுப்பிவிட்டேன். சுங்கை பட்டாணியிலும், கூலிமிலும் (9/10-4.2021 தேதிகளில் நாவலின் அறிமுக நிகழ்ச்சியில் குறைந்தது 100 நாவல்களை வாசகர்கள் வாங்கிச் சென்றார்கள். மேலும் நாவலை புலனத்திலும், முகநூலிலும் விளம்பரம் செய்தமையால் சுமார் 150 நூல்கள் தபால் வழியாக வாசகர்களைச் சென்றடைந்தன. இளைய தலைமுறையினருக்கு நம்முடைய இரண்டாம் உலக யுத்த சப்பானியர் ஆட்சியின் மனிதக் கொடுமைகளை வாசிக்கக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கும் நாவல்களை கொண்டுபோய்க் கொடுத்துள்ளேன். என்னிடம் இப்போது சொற்ப நூல்களே எஞ்சியுள்ளன. நாவல் வெளியா...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)