Skip to main content

Posts

Showing posts from October 27, 2024

மெய்யழகன் திரை விமர்சனம்.

மெய்யழகன் திரை விமர்சனம். மெய்யழகன் திரைப்படத்தை ஓர் எளிமையான கதைக்களம்  என முதலில் நினைத்தேன். அந்தக் கதை திரையில் வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்றே புறமொதுக்கினேன். ஏனெனில் அது ஒரு சிறுகதைக்கான ஒரு  குறுகிய வடிவம் கொண்டது. இரண்டே இரண்டு மையப் பாத்திரங்களே போதுமானது, சிறுகதையாக வடித்திருந்தால் . இதற்கு சினிமா என்ற விரிவான தளம் தேவையற்றது என்ற என் மதிப்பீடு குறையானது எனப் புரியவைத்த படம் மெய்யழகன் . திரைக்காக அவர் இணைத்த உப காட்சிகளும் துணை பாத்திரங்களும் அதனை கவித்துவமாக்கியிருக்கிறது. காட்சி ஊடகமாக வந்த  பின்னர் 'மெய்யழ்கன்'    ஒரு காவியமாக விரிவுகொண்டு துலங்கி வந்திருப்பது வியப்பூட்டியது. பிரேம் குமார் போன்ற தேர்ந்த இயக்குனரால் மட்டுமே ஆகக்கூடிய சாதனை இது.  பால்ய காலத்தில் அணுக்கமான பழக்கத்துக்குப் பின்னர் அருள்மொழியும் கார்த்தியும் சந்தித்துக்கொள்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது. அருள்மொழியின் மனம் அந்தச் சிறார் பருவ சம்பவங்களை முற்றாக மறந்தவிட்ட நிலையில் கார்த்தியை ஒரு திருமண விருந்துபசரிப்பில்  மீண்டும் சந்திக்க நேர்கிறது. திருமண விருந்து நிகச்சிக்...