சிக்கல்களைப் புரிந்து விடுபடுவதே வாழ்க்கை . ‘ குறையொன்றுமில்லை ’ நூல் மதிப்புரை சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி என் இளமை காலந்தொட்டு நண்பர் . அவர் காவிக்கு மெல்ல மாறும் ஞானப் பரிமாணத்தை நான் உள்வாங்கி ரசித்தபடி இருந்தேன் . ஒரு சராசரி நண்பனின் வாழ்க்கை மாற்றங்களைப் பார்ப்பதைவிடவும் , சுவாமி போன்றவர்களின் வாழ்க்கை நகர்தல் மிகப்பெரிய சுவாரஸ்யத்தை அளித்தபடியே இருந்தது . சக நண்பர்கள் போலல்லாமல் அவரின் குறிக்கொள் அல்லது எல்லை அசாதாரணமானதாக , சராசரியற்றதாக , சக மனிதனைப் போலல்லாத ஒன்றாக இருந்தது . இவர் ஏன் இப்படித் திசை மாறிப்போகிறார் என்ற எண்ணம் தோன்றியதும் உண்டுதான் . வெகுஜன வாழ்வு போலல்லாமல் தனித்துவ பாதை எப்போதுமே நம் கவனத்தை கோருபவை ! அதனைத் திசைமாறல் என்பது தவறான சொ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)