கோ.புண்ணியவான் கவிதை யாப்பதில் மட்டுமல்ல இன்னொரு வேலையிலும் திறமை மிக்கவர் புலவர் வேந்தர்கோன். கவிதை யாத்தலிலும் அதனைச் சந்தைப்படுத்தலிலும் உண்டாகும் பின்னடைகளைச் சமாளிக்க அவர் மீண்டும் தனது பிறப்பூருக்கே குடி பெயர்ந்து விடுவார். அவரைப் பிறப்பூரிலே பார்க்கும் நண்பர்கள் “ இது 1001வதா” என்பர். அங்கே எப்போதும் அவருக்கான வேலை காத்திருக்கும். அவருக்கு மட்டுமல்ல தொழில் நுட்பம் தெரிந்த மற்றெல்லாருக்கும் அங்கே வேலை உண்டு. நெல் மூட்டைகளை ஆலையிலிருந்து வெயிலில் காய வைக்கும் களத்துக்கும், களத்திலிருந்து மீண்டும் ஆலைக்கும், ஆலையிலிருந்து ஏற்றுமதி லாரிக்கும் சுமந்து கொண்டு போவதுதான் அந்த வேலை. நெல் மூட்டைகளை சுமப்பது எளிதானதுதான் ஆனால் நெல் மூடைகளைவிட அரிசி மூடைகளைச்சுமப்பதுதான் சிரமம். இரட்டிப்பு பாரம். 60 கிலோ வரை மிரட்டும். அறுபது கிலோவுக்கும் குறைவான எடையுள்ள மனிதர்கள், அதனை லாவகமாக தோளில் ஏற்றி சுமை அழுத்தாத வண்ணம் தூக்கி நடப்பதன் தொழில் நுட்பம் தெரிந்தால்மட்டுமே அது எளிதானதாகத்தெரியும். என்னாலும் இந்தச் சுமையை தோளில் ஏற்றி சுமந்து நடக்க முடியும் என்று ஆழமறியாமல் காலை விட்டவர்கள், முதுகெ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)