Skip to main content

Posts

Showing posts from January 7, 2018

மாடுகள் மலைகள் ஏரிகள் ~ இறுதித் தொடர் நியூசிலாந்து பயண அனுபவம்

மாடுகள் மலைகள் ஏரிகள்~10 (இறுதித் தொடர்) பூனாய்காக்கி ஒரு சிற்றூர்தான். சாலையோரத்தில்  ஒரே ஒரு நீண்ட கடைகள் வரிசை கொண்ட சிக்கனமான நிலப்பகுதி. ஆனால் அது பேன்கேக் வடிவிலான பாறைகளும், அதலபாதாள வலைகுடாக்களும் கொண்ட கடற்கரை ஊர். இதனைப் பார்க்கப் போய், கவனமற்றிருந்த  எத்தனை பேர் உயிரை விட்டிருப்பார்கள் என்று சொல்வதற்கு அங்கே சில எச்சரிக்கை வாக்கியங்கள் எழுதப்பட்டிருந்தன. அதில் மிகவும் துல்லியமான, படிமங்களை விரித்து, அச்சுறுத்தவல்ல ஒரு வாக்கியம், "ஒரே ஒரு புகைப் படத்துக்காக, உயிரை இழக்கும் முட்டாளா நீங்கள்' என்பது. ஆமாம் செல்பி தம்படம் என்ற பெயரில் நடக்கும் கோமாளிக் கூத்தை மலேசியாவில் நிறையவே காணலாம். சில பெண்கள்  குறிப்பாக இந்த தம்படம் எடுப்பதில் தங்களைக் கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். முன்னர் யாராவது எடுத்துத் தந்து அதனை படமாக்கிக் கொடுக்கும் பழைய தொழிநுட்பத்தை பன்மடங்கு தாண்டிவந்த ஒரு வசதிதாதான் இப்போதுள்ள கருவிகளும்  இந்தத் தம்படமும்.ஆனால் அதற்காக இத்தனை வகைப் படங்களா?  இத்தனை அலட்டல்களா?  தங்கள் அழகை தாங்களே ரசிக்கும் ஒரு உத்தி இது எ...

மாடுகள் மலைகள் ஏரிகள்~ 9 நியூசிலாந்து பயண அனுபவம்

மாடுகள் மலைகள் ஏரிகள்~ 9 அதிகாலையில் பனிமலைக்கு எல்லாரும்  கிளம்பியபோது நான் அவர்களோடு நான் போகவில்லை. என் செவிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் சில தொல்லைகளைக் கொடுத்து வந்தது. கண் காது மூக்கு டாக்டர் செ விப்பறையில் சிறு துளை விழுந்திருக்கிறது, அதனால் சத்தம் உள்ள   இடத்தைத் தவிர்க்கும் படி அறிவுறுத்தினார். நான் தொலைக்  காட்சி கூட பார்ப்பதில்லை. சினிமா தியேட்டர்கள் அதை விட மோசம்.  கொஞ்சம் கவனமாக இருந்ததால் செவிப்பறை கூடி வந்தது. உலங்கு வானூர்தி அதிக ஒலி எழுப்பக் கூடியது.எனவே தவிர்த்தேன். ஆனால் எல்லாருக்கும் செவி பாதுகாப்பு கருவி கொடுத்தார்கள் என்றார்கள். நான் போகவில்லை என்றதும், அன்றைக்கான காலை பகல் உணவை நான் தயாரிக்கும்படி ஆனது. முதல் நாள் வாங்கி வைத்த இறாலைப் சம்பல் செய்தேன்.  வெள்ளரிக்காயை (9  ரிங்கிட்) முட்டை கலந்து சூப் செய்தேன். பகலுணவு உண்ணும் போது சாப்பிடச் சாப்பிட சாப்பிட்டுகிட்டெ இருக்கணும் தோணுது என்றார்கள். ஒரு கலைஞனுக்கு எல்லாமே எளிதில் கைவரும். பனிமலைக்குப் போய் வந்தவர்கள் மறக்க முடியாத அனுபவம் என்றார்கள...

மாடுகள் மலைகள் ஏரிகள் ~ 8 நியூசிலாந்து பயண அனுபவம்

மாடுகள் மலைகள் ஏரிகள்~ 8 நியூசிலாந்தில் எனக்குத் தெரிந்து மூன்று இடங்களில் இந்த பங்கி ஜம்ப் அதாவது 80 திலிருந்து 140 மீட்டர் வரை பாலத்திலிருந்து கீழ் நோக்கிக் குதித்து சாகசம்   செய்யும்  இடங்கள் இருக்கின்றன . மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்பு அம்சங்களோடுதான் கிழே குதிக்க ஏற்பாடு செய்கிறார்கள்.. ஆனால் கீழே பார்த்தால் நம்முடைய ஆவி கடைசியாக   நம்மை    நலம் விசாரிக்கும். மணமக்களைப் பார்த்து கடைசியாக ஒருமுறை சிரிங்க என்று கேமரா மேன் சொல்வதன் குறியீடுபோல உணர்த்தும். முதுகுத்     தண்டில் கம்பளி ஊரும்.உச்சி மண்டையில் சிறு சில்லிடல் உணர்வோம். நரம்புகள் உதறும். குருதிச் சூட்டை உணர்வோம். பூமி எதிர்த்திசையில் சுழலும். ஆனால் ஐரோப்பிய பெண் பிள்ளைகளுக்கு அது கொண்டாட்டம். கொண்டாட்டமா உள் அச்சத்தைப் போக்க வலிந்து கொண்டாட்டத்தையும் அச்சம் நீக்கலையும் வரவழைக்கும் சுய தைரிய மூட்டலா என்று தெரியவில்லை. ஒரு பெருங்கூய்ச்சலோடுதான் குதிக்கிறார்கள்.  அதற்கு முன் முன்னேற்பாடுகளை மூன்று முறை சரி பார்க்கிறார்கள். உடல் நிலை சீராக இருக்கிறதா என்று பார்க்கிறார்கள்...

மாடுகள் மலைகள் ஏரிகள் ~7 நியூசிலாந்து பயண அனுபவம்

 மலைகள் மாடுகள் ஏரிகள்~7 உலங்கு வானூர்தியின் வழி திமிங்கலத்தைப் பார்க்கலாம் என்றவுடன் ஆர்வமாகிவிட்டோம். கண்டிப்பாய் பர்க்கமுடியுமா என்று விசாரித்தோம். அது உங்கள் அதிர்ஸ்டத்தைப் பொறுத்தது என்றார் விமான ஓட்டி. (அதுக்கு அதிர்ஸ்டம் வேண்டும் எங்களைப் பார்க்க!) . 10 பேரில் இருவருக்கு அது போன்ற வாய்ப்பு கிட்டுவதில்லை. என்றார். நமக்கும் அப்படி ஆகிவிட்டால் என்னாவது என்று பின் வாங்கினோம். அரை மணிநேரப் பயணம்தான். ஆனால் தாழப் பறந்து   காட்டுவார்கள். விலை மிக அதிகம்.  திமிங்கலத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டுவதும் சுலபமல்ல. அந்தச் சுற்றுலாத் தளத்தை அரசே நடத்துகிறது. அங்கிருந்து கிரைஸ்சர்ச் நோக்கிப் பயணமானோம். நாங்கள் பெர்ரியில் ஏறும்போதே  கிரைஸர்ச்சுக்குப் போகும் மலையோரப் பாதை முன்னர்   எரிமலை வெடித்த காரணத்தால் மூடப்பட்டுவிட்டது என்று எச்சரிக்கப் பட்டது. ஆனால் தென்   தீ வுக்குப் போய் இரண்டு நாட்களில் திறந்துவிடப் பட்டிருந்தது. நாங்கள் சுவிட்சர் லாந்தில் பார்த்ததுபோல மலைகளைக் குடைந்து  போடப்பட்ட  நெடுஞ்சாலைகள் இங்கே பெரும்பாலும் இல்லை . ப...