அஞ்சலி தீவீர செயல்வீரன் பாலகோபாலன் நம்பியார் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாய் பாலகோபாலனைப் பத்திரிகையில் பார்க்கமுடியவில்லையே என்று நான் அவ்வப்போது சந்திக்கும் சக எழுத்தாளர் பி . கோவிந்தசாமியைக் கேட்டபோது , அவர் நோய்வாய்ப்பட்டு இந்தியாவில் சிகிட்சைப்பெற்று வருகிறார் என்றார் . வெளிநாட்டில் சிகிழ்ச்சி பெறும் அளவுக்கு நோயின் சீற்றம் எனக்குள் படிமமாக வளர்ந்துகொண்டே இருந்தது . முகநூலில் அடிக்கடி எழுதுபவர் பாலா . நேரடி உரயாடலுக்கு வந்து விலாவாரியாக பேசுவது உண்டு . ஏன் இப்போதெல்லாம் பதிவுகள் போடுவதில்லை என்று கேட்டேன் . உடல் நிலை உடன்படவில்லை அண்ணா என்று சொல்லிவிட்டு உரையாடலை நீட்டிக்காமல் துண்டித்துக்கொண்டார் , அல்லது உரையாடல் தொக்கி நின்றது . “ உடம்புக்கு என்ன ?” என்ற என் தொடர் கேள்வி உரையாடல் பெட்டியில் பதில் சொல்லப்படாமலேயே இருக்கிறது இன்றைக்கும் . அ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)