ஆக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும் சமீபத்தில் நான் குடியிருந்த பழைய வீட்டைக் கடந்து போகவேண்டியிருந்தது. என் நண்பரின் இறப்பு என்னை அங்கு செல்ல வைத்திருந்தது. அப்போது அந்த வீடும், வீட்டின் சுற்றுப்புறமும் என் வருகையால் உயிர் பெற்றுவிட்டது போன்ற உணர்வு எனக்கு உண்டானது. அண்டை வீட்டு நண்பரின் மரணத்தை விட இந்த வீட்டின் நினைவே என்னைச் சுற்றி சூழ்ந்துகொள்ள ஆரம்பித்திருந்தது. நான் குடியிருந்த என் பழைய வீட்டைக் கடந்துதான் நண்பரின் வீட்டுக்குச் செல்லவேண்டும். ஆனால் நான் குடியிருந்த வீட்டை எளிதில் கடந்து சென்றுவிட முடியவில்லை என்னால். அந்த வீடு தன் ஆக்டோபஸ் கைகளால் என்னை ஈர்த்தபடி இருந்தது. அதனைத் திரும்பிப் பார்த்த படியே நடந்தேன். அந்த வீடு எனக்கு இப்போது சொந்தமில்லை என்றாலும் எனக்கும் அதற்குமான உளப்பூர்வமான பந்தம் தொட்டுத் தொடர்ந்த வண்ணமாகவே இருந்திருக்கிறது. வந்த வேலையை முடித்துவிட்டுத் திரும்பும்போது ஒருமுறை வீட்டை எட்டிப்பார்த்துவிட்டாவது போய்விடவேண்டும் என்ற ஆசை உண்டானது. நண்பரின் மரணத்துக்கு வந்த என்னை நான் புழங்கிய வீடுதான் என்னை முழுமையாக ஆக்கிரமித்தபடி இருந்தது. இறப்...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)