என் பால்ய நினைவுகளின் நீட்சியில் ஒலிக்கும் நாடக வசனக் குரல் கோ.புண்ணியவான் (kopunniavan.blogspot.com) மலேசியாவில் நாடகக்ககலை எழுபதுகளிலேயே முடக்கம் காண ஆரம்பித்து இன்றைக்கு அருதியாக இல்லாத நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டது. எனக்குத்தெரிந்து ஒருவர் மட்டுமே மீதமும் காணாமற்போகாமல் இருப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அவர் எஸ்.டி. பாலா. அவருடைய இருவர் நாடகம் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் மரபார்ந்த நாடக அரங்க அமைப்பை, ஒப்பனையை, மிகை நடிப்பை எஸ்.டி பாலா தன் நவீன நாடகத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை. எனவே மரபான நாடகக்கலை மலேசியாவில் தழைக்கவில்லை. இருப்பினும் தனி ஒருவனாக இருந்து நாடகக்ககலையை முன்னெடுத்துச்செல்லும் பாலா மலேசியாவின் நவீன நாடகக்கலைக்கான நல்ல அடையாளம். இங்கே தெருக்கூத்து போன்ற விளிம்பு நிலைக்கலைஞர்க்கான, ரசிகர்க்கான நிகழ்த்துக்கலை எந்நாளும் இருந்தததில்லை. அந்தக்காலத்தில், அதாவது அரை நூற்றாண்டுக்கு முன்னால் ரப்பர்த்தோட்டத் தீமிதி விழாக்களின் போது விடிய விடிய கூத்து அரங்கேற்றப்பட்டிருக்கிறது. வட்டாரத்துக்குக் ஒரு நாடகக்குழு உயிர் வாழ்ந்திருக்கிறது. ஆண்களே பெண்வேடமணிந்து ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)