மௌனம் சிற்றிதழில் வெளியான என் பேட்டி தொடர்பான... கோ.புண்ணியவான் : சிறு குறிப்பு ‘ மெளனம் ’ , கவிதை பேசும் இதழ் என்பதை மீண்டுமாய் நிரூபித்துள்ளது. கவிதைக்கும் கவிஞனுக்கும் என்ன செய்ய வேண்டுமோ அதை மெளனம் நிறைவாகவே செய்துகொண்டு வருகிறது. ஒவ்வொரு கவிஞனுக்குள்ளும் கவிதையும் கவிதை இதழும் எப்படியெப்படியெல்லாமோ வரவேண்டுமோ, அப்படியே மெளனம் இதழ் வெளிவருகிறது. மெளனம் இதழின் மூலம் நல்ல கவிதைகள் முன்னிறுத்தப்படுவதையும் அதைப் பற்றி விவாதிப்பதையும் தரமான இரசிகர்கள் வரவேற்கிறார்கள். அந்த வகையில், கடந்த மெளனம் இதழ், எழுத்தாளர் கோ.புண்ணியவானின் சிறப்பிதழாக வெளிவந்ததில் மிக்க மகிழ்ச்சி. இதுபோன்று இதர கவிஞர்களின் சிறப்பிதழ்களும் தொடர்ந்து வர வேண்டும். அதனை மெளனம் செய்யும் என்றே நான் எண்ணுகிறேன். இதுபோன்ற நகர்த்தல்கள் மிகவும் அவசியம். இல்லையேல், நாம் காலம் காலமாகத் தமிழகக் கவிஞர்களின் நேர்காணல்களையும் அனுபவங்களையும் மட்டுமே வாசித்து, மனம் நெகிழ்ந்து, பாராட்டி மலேசியத் தமிழ்க் கவிதை உலகோடு ஒப்பிட்டுத் தூற்றிக் கொண்டிருப்போம். கோ.புண்ணியவானோடு இது நின்று விடக்கூடாது. இங்குப் பலர் இருக்கின்றனர். அவர்...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)