குழப்பம் 3 தயாஜி முதல் நாள் நள்ளிரவு 12 மணிக்கு என் மின்னஞ்சலைத் திறந்து பார்க்கும்போது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெ எனக்கொரு அஞ்சல் அனுப்பியிருந்தார். புண்ணியவான் தயாஜி எங்களை டேக்சியில் ஏற்றி ஒரு ஒட்டலில் விடச்சொன்னார். அது வேறொரு விடுதியாக இருக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை என்று எழுதியிருந்தது. அவரிடம் மலேசிய தொலைபேசி எண் இல்லாததால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போது கைக்குக் கிடைத்தது மின்னஞ்சல் மட்டுமே. அவருடைய தொலைபேசி எண்ணை எனக்கு அன்று மணி 4 வாக்கில் அனுப்பியிருந்தார் யுவா. நான் அவர் மின்னஞ்சல் அனுப்பிய நேரத்தைப் பார்க்கவில்லையாதலால்., சற்று முன் அனுப்பிய மின்னஞ்சலாக இருக்கும் என்றே நினைத்திருந்தேன். நான் அவரோடு உடனடியாகத் தொடர்பு கொண்டேன். இந்த நள்ளிரவில் என்ன அலைக்கழியப் போகிறார்களோ என்ற கவலை எனக்கு. "ஜெ என்ன எங்கே இருக்கிறீகள்.. மின்னஞ்சலைப் பார்த்தேன்," என்றேன் படபடப்போடு. "அதை இன்று காலையில் அனுப்பினேன். என்னையும் கிருஷ்ணனையும் ஒரு டேக்சியில் ஏற்றி அனுப்பி விட்டு. பின்னால் தயாஜியும் ராஜமாணிக்கமும் வந்தார்கள். டெக்சி எங்களை வேறு ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)