படத்தில் எஸ்ரா, கோ.புண்ணியவான், முனைவர் முல்லை, சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரன் ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி தொடங்கி 21ம் தேதிவரை மலேசிய எழுத்தாளர் சங்கம் மீண்டும் ஒரு சிறுகதைப் பயிலரங்கை முன்னெடுத்தது. முனைவர் முல்லை ராமையாவிடம் இதன் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருந்ததானது இது வழக்கத்துக்கு மாறான பயிலரங்காகத்தான் இருக்கப்போகிறது என்ற எண்ணத்தோன்றியது. மனிதர்கள் எப்போதுமே ஒரே மாதிரியாகச் சிந்திப்பவர்கள் அல்ல. ஒரு நடவடிக்கையை ஒரே மனிதரிடம் ஒப்படைக்கும்போது அதன் நடவடிக்கைகளின் ,திட்ட வரையறை பெரும்பாலும் முன்னது போலவே பின்னதும் இருக்கும். இம்முறை மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் கருத்தரங்கின் சிந்தனையாளராகப் பேராசிரியர் முல்லையிடம் ஒப்படைத்ததன் வழி அதன் போக்கு வேறு மாதிரிதான் இருக்கவேண்டும் என்று யூகித்தது, தடம் மாறாமல் இருந்தது. எனக்கான பொறுப்பை விளக்கும்போதே அவரின் நோக்கம் நான் நினைத்தது போலவே அமந்திருந்தது. நீங்கள் சிறுகதை துவக்கம் பற்றி மட்டும் பேசுங்கள். நீங்கள் பேச வேண்டிய தலைப்பு ‘வாசிப்போரின் கருத்தைக் கவரும் சிறுகதை...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)