Skip to main content

Posts

Showing posts from May 22, 2016

பின் இருக்கையில் ஒரு கிழவி

சிறுகதை பின் இருக்கையில் ஒரு கிழவி ஊர் அடங்கிய நேரம். எல்லா ஊரிலும் ஒரே நேரத்தில் ஊர் அடங்கிவிடுவதில்லை.  உட்புறப்பகுதியில் அமைந்தது என்பதால் எங்கள் ஊர்  இரவு இளமையாக இருக்கும்போதே அடங்கி விடும். தனித்தனி நிலப்பட்டாவில் கட்டப்பட்ட நான்கு வீடுகளுக்கு மத்தியில் அடக்கமாய் அமைந்திருந்தது. உள் தாழ்ப்பாளிட்டு விருந்தினர் அறை விளக்கை அடைத்துவிட்டு படுக்கை அறைக்குள் நுழைந்தபோது  கதவு பவ்வியமாக  தட்டப்படும் ஓசை கேட்டது. அந்த நேரத்தில் கதவு தட்டப்படுவது அபூர்வமாகவே நடக்கும். அபூர்வம் என்று சொல்வதைவிட அறவே இருக்காது எனச் சொல்வதே சரியானது. என் மனைவியும் நானும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். ‘யாரது இந்த நேரத்தில்?” என்ற புதிர்க் கணைகள் கண்களில் தெறித்தன. மூடப்பட்ட கதவு வழியே பார்த்து தெரிந்துகொள்வதற்கு அது நூதன கதவு அல்ல. திருடன் வரும் அகால நேரமல்ல அது. உறவினராகவும் இருக்க வாய்ப்பில்லை! கதவைத் திறந்தேன். முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஆளாக இருக்கும் என்று கணிக்கும் முன்னரே சாராய வாடை திரண்டு வந்து தாக்கியது. எங்கோ பார்த்த முகம் அல்லது முன்பின் அறிமுகம...