சாலையோர டபா (உணவுக்கடை) செங்கோட்டை மார்பல் வேலைபாடுகள் கைகளால் செதுக்கப்பட்டவை தாஜ்மஹால் தொடர் 8 அதிகாரத்துவமும் அடிமைத்தனமும் டில்லியைக் கடக்கையில் முக்கிய சாலையோரத்தில் தலைவர்கள் சிலைகள் நிறுவப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. அந்தச் சிலைகள் தரும் செய்தி படிமமாகி மனதை வருத்தியது. ஆமாம் , விடுதலைப் போராட்டத்துக்கான வியர்வையும் ரத்தமும் சிந்திய காட்சி சிலைகளாக எழுந்து நின்றுகொண்டிருந்தது. பேசிக்கொண்டே போகையில் வெள்ளிக்கிழமை அக்ராவில் இருக்கும் காதல் சின்னமான பளிங்கு மாளிகை , தாஜ்மஹால் வெள்ளிக்கிழமை அடைப்பு என்ற செய்திதான் அது. நாங்கள் வெள்ளிக்கிழமை ஜெய்ப்பூரில் இருப்போம். அப்படியானால் தாஜ் மஹாலைக் காண்பது கனவாகவே கலைந்துவிடும் என்ற பயம் மருமகனுக்கு. நான் 2002ல் தாஜ்மஹாலைப் பார்த்துவிட்டேன். எனவே எனக்கு அது பெரிய விஷயமாகப் படவில்லை. நான் தாஜ் மஹாலைப் பார்த்தே ஆகவெண்டும். அதற்காகத்தான் முக்கியமாக வந்தேன். நீங்கள் உடனே திசையை மாற்றுங்கள் என்றார். டில்லியைக் கடந்து ஜெய்ப்பூருக்குச் செல்லும் மெய்ன் சாலைக்கு நுழைந்தாயிற்று. அக...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)