Skip to main content

Posts

Showing posts from 2009

வெள்ளி முளைத்தும் விடியாத சமூகத்தேக்கம்

கடந்த வெள்ளி சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் லங்காவித்தீவுக்குச் சுற்றுலா போயிருந்தோம். மலேசியாவின் மேற்குக்கடற்கரை பகுதியில் ஒரு மீனவத்தீவாகவே 70களின் இறுதிவரை தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட தீவு லங்காவி.( இலங்கையை நினைவுக்கு வருகிறதா? இராமனின் பாதச்சுவடு லங்காவியில் இருபதாகச்சொல்கிறார்கள்) விவசாய நிலமும் ஏழை மனிதர்களும் அவர்களைச்சூழ்ந்துள்ள ஏழ்மையைப்போல், கடல் அலைகள் மட்டுமே இருந்த இந்தத்தீவு இன்றைக்கு உரு மாறி, நிறம் மாறி, ஏழ்மை என்ற முள்வேலியை அகற்றிக்கொண்டு தன்னை வைரங்களாலான ஆபரங்ணங்களால் அழகுபடுத்திக்கொண்டு கம்பீரமாகக்காட்சி தருகிறது. ஒரு மந்திரவாதியின் மந்திரக்கோல் சொடுக்கில் திடீரென வேறொன்றாய்க்காட்சி தரும் லங்காவித்தீவு கரையை வந்தடையும் அலகலைப்போல சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுத்த வண்ணம் இருக்கிறது. அந்தத்தீவீன் தலையெழுத்தை மாற்றிய மந்திரவாதி வேறு யாருமல்ல. மலேசியாவின் நான்காவது பிரதமராக 20 ஆண்டுக்கும் மேலாக இருந்த துன் மகாதிர் தான். ( துன் என்பது பேரரசர் வழங்கிய மிகப்பெரிய கௌரவ விருது) மகாதிர் மேல் மிகக்காத்திரமான அரசியல் சார்ந்த விமர்சனங்கள் இன்றளவும் வீசப்பட்டுக்கொண்டு இருந்

சினிமாக்காரனுக்கு ஏன் இந்தச் சின்ன புத்தி?

இரண்டு தினங்களுக்கு முன்னர் இதனை எழுத நினைத்து நான்கு ஐந்து வரிகள் எழுதி பின்னர் அழித்துவிட்டேன். எனக்கு எழுதப்பிடிக்கவில்ல. ஆனால் நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்த பின்னர் அதன் பாதிப்பால் மீண்டும் எழுதத்தூண்டியது. வேண்டாம் என்று விட்டு விடலாம் என்று பார்த்தால், ஏதோ ஒன்று எழுதிவிடுவதற்கான நெருப்பை மூட்டிக்கொண்டே இருக்கிறது. இந்தச்சகதியெல்லாம் எழுதி நேரத்தை ஏன் வீணாக்கவேண்டும் என்று முடிவெடுத்து ஒதுங்கினாலும், குறுக்கே வந்து எழுதித் தொலைப்பதற்கான ஆதங்கத்தை மேலோங்கச்செய்தது. இப்போதும் சொல்கிறேன் நான் எழுதவில்லை, எனக்குள் புகுந்த ஒன்று தீய சக்தியைப்பற்றி எழுத வைக்கிறது. மலத்தை 24 மணிநேரத்துக்குமேல் உடல் வைத்திருக்க விரும்புவதில்லை. இல்லையா? ஒரு வாரத்துக்கு முன்னால் நடிகர், சூப்பர் ஸ்டார், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ரஜினியின் பிறந்த நாள். தமிழை எப்படி உச்சரிக்கவேண்டும் என்று சிவாஜி கணேசன் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். எப்படி இடுப்பை ஆட்டிக்கொண்டு கைகளை மூன்னும் பின்னுமாக (கொசு விரட்டும் மாட்டின் வாலைப்போல) வீசி வீசி வசனத்தை நாக்கில் படாமல் பேசுவது என்ற வித்தையை தமிழ

தமிழ் மொழியைத்தாரை வார்க்க மலேசியத்தமிழன் தயாராயில்லை

தமிழ் மொழியைத்தாரை வார்க்க மலேசியத்தமிழன் தயாராயில்லை கடந்த 18.12.09 ல் அரக்கப்பரக்க ஆரம்பித்ததுதான் சுங்கைப்பட்டாணியில் spm தமிழ் மொழி, தமிழ் இலக்கியப்பாடம் சார்ந்த கவன ஈர்ப்புக்கூட்ட்டம். இரண்டே நாட்கள் அவகாசத்தில் எப்படி மக்களைத்திரட்டுவது என்ற மலைப்பே என்னை இயங்க வைத்தது. 2010 ல் நடப்புக்கு வரப்போகும் புதிய 10 பாட அமலாக்கத்துக்கு முன் விரைந்து செயல்படவேண்டிய கட்டாயம். நடப்புக்கு வந்துவிட்டால் மாற்றுவதற்கு மேலும் சிரமத்தை எதிர் நோக்கவேண்டி இருக்கும். நமக்கு இருக்கவே இருக்கிறது நூதன தொடர்புத் தொழில் நுட்பம். குறுந்தகவல், தகவல் தெரிவிக்க பத்திரிகை வழி சுற்றறிக்கையைத்திணித்து அனுப்புவது, விரைவாகப் பதாகைகளைத்தயார் செய்து சுங்கைப்பட்டாணியின் நாலு திசைகளிலும் ஒட்டி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க என அனைத்து வகையான பணியிலும் ஈடுபட்டேன். யாரையும் துணைக்கு அழைக்கலாம் என்றால் என்னைப்போல பணி ஓய்வு பெற்றிருந்தால் பரவாயில்லை. எல்லாருமே வேலை செய்பவர்கள். அதிலும் மொழி மீது பற்று இருத்தல் அவசியம். சும்மா இழுத்துக்கொண்டுபோனால் நிழல்போலத்தான் கூடவே இருப்பார்கள். நம்முடன் இருக்கும் தருணங்களில் அ

கவிதைக்கடவுளின் தரிசனமும் தூக்கம் துறந்த என் பின்னிரவுகளும்

( 2009 ஆண்டின் முதல் மூன்று மாதப் புதுக்கவிதைகளின் ஆய்வு.கவிதைப்பற்றிய புரிதலை உண்டாக்க கல்லூரி மாணவர்களை முன்வைத்து எழுதப்பட்டது.) கோ.புண்ணியவான் நேற்றைய தொடர்ச்சி........ மனிதர்கள் அணிந்து திரியும் எண்ணற்ற முகமூடிகளும் இந்த உலகம் ஒரு நாடகமேடை,நாமெல்லாம் அதன் நடிகர்கள் என்கிறார் அறிஞர் ஷேக்ஸ்பியர்.என்ன தீர்க்க தரிசன நடப்பியல் உண்மை.நம்முடைய குணத்தை, உற்று கவனித்தால் நாம் எத்தனை பெரிய நடிகர்கள் என்று புரியும்.நாம் எப்போது அசலான நாமாகிறோம், என்று மனசாட்சியை கேட்டுப்பார்த்தால் அநேகமாக பதில் கிடைக்காது.மனசாட்சியும் குழம்பிய நிலைக்கு உள்ளாகும்.எல்லாரும் கண்ணுக்குப்புலப்படாத ஆயிரக்கணக்கான முகமூடிகளை வைத்துக்கொண்டு சந்தர்ப்பத்துக்கு தகுந்த மாதிரி மாற்றி மாற்றி அணிந்துகொண்டு திரிகிறோம். சுயநலமிகளின் உலகமல்லவா இது! வேறெப்படி இருக்கும்? வேலைக்குச்செல்லும்போது நண்பர்களைச்சந்திக்கும்போதும் உறவினர்களைத் திடீரெனச்சந்திக்க நேர்ந்தால் வடிவமைத்துக்கொள்கிறோம் பல முகமூடிகளை (பா.அ.சிவம் - மௌனம்) வழிப்போக்கனின் முகத்தைப் பொருத்திக்கொண்டு வீதி வழி போகையில் வியர்த்தலுக்

கவிதைக்கடவுளின் தரிசனமும் தூக்கம் துறந்த என் பின்னிரவுகளும்

( 2009 ஆண்டின் முதல் மூன்று மாதப் புதுக்கவிதைகளின் ஆய்வு.கவிதைப்பற்றிய புரிதலை உண்டாக்க கல்லூரி மாணவர்களை முன்வைத்து எழுதப்பட்டது.) கோ.புண்ணியவான் நேற்றைய தொடர்ச்சி........ தாய்மொழி- காலனித்துவம் சிந்திவிட்டுப்போன கசடுகள் தாய் மொழி சார்ந்த உணர்வும் கவிதையின் பாடு பொருளாகப்பரிணமித்தது.மொழிக்கு ஊறு நிகழும்போது யார்தான் தட்டிக்கேட்பது? பின்னர் எதற்கு படைப்பாளன்? உங்கள் சாய்ஸ் சண்டே சமையல் சன் டிவி டாப் டென் தமிழை இங்கே பிறர் கொல்கிறார்கள் தமிழ் நாட்டில் தமிழனே கொல்கிறான் பிலீஸ் பிரதர் லவ் டமில் (ஓவியன் - தலைநகர்) தமிழ் நாட்டில் ஆங்கிலக் கலப்பு, ‘செம்புலப்பெயல் நீர் போல ஆங்கில மொழியும்தான் அழுத்தமாகக் கலந்ததுவே’ என்றாகிவிட்டது விட்டது.அதனைப்பிரித்து எடுத்து, ‘இந்தா - டெட்டோல் போட்டு கழுவிய தமிழ்,’ என்று கொடுப்பதென்பது கொக்குக்குக் கொம்பு முளைத்தால்தான் ஆயிற்று.கவிதையில் என்ன அங்கதம் பாருங்கள். ‘பிலீஸ் பிர்தர் லவ் டமில்’ என்று ஆங்கிலத்தில் சொன்னால்தான் அவர்களுக்குப்புரியும் என்ற நிலை அங்கே! இங்கே மட்டும் என்ன வாழ்கிறதாம்?மலாய் ஆங்கிலம் தமிங்கலம் எல்லா

நேற்றைய தொடர்ச்சி, கவிதைக்கடவுளின் தரிசனமும் தூக்கம் துறந்த என் பின்னிரவுகளும்

( 2009 ஆண்டின் முதல் மூன்று மாதப் புதுக்கவிதைகளின் ஆய்வு.கவிதைப்பற்றிய புரிதலை உண்டாக்க கல்லூரி மாணவர்களை முன்வைத்து எழுதப்பட்டது.) கோ.புண்ணியவான் காதலைப்பற்றி இன்னொரு கவிஞனின் பதிவு இது. யதார்த்த நிழலில் கடந்து செல்லும் காற்றினுள்கூட பயணிக்கும் உன்னோடு பேசும் என் வார்த்தைகள் ........... என்னோடு நீ நடந்த தெருக்களில் நிறம் அறியா அறியாத சுவடுகளாய் பதிந்து கிடக்கிறது உயிர்ச்சிதறல் உன்னில் ஊடுறுத்துச்செல்லும் நினைவுகளினூடே உயிரும் வருகிறது பத்திரப்படுத்த வரவேண்டும் நீ (ப.ராமு- நயனம்) இந்தக் கவிதையின் வழியாக கசியும் பொருளைப்பாருங்கள்.சொல்ல வந்தது அப்படியே சொல்லிலும் விழுந்திருக்கிறது. உயிரின் நிறம் என்ன? அறிய முடியாத நிறம்.அந்த நிறம் அவளோடு நடந்த தெருக்களில் இன்னும் சிதறியே கிடக்கிறதாம். தன் நினைவாலேயே உயிரும் உடன் வருகிறது.அது காணாமற்போகாமல் இருக்க, நீதான் பக்கதுணையாய் வரவேண்டும் என்கிறான் கவிஞன். இந்தக்கவிதை முழுக்க முழுக்க உணர்வுத்தளத்தில் இயங்குகிறது.இது உயிர்ப்புடன் இயங்குவதற்கு அவர் கையாண்ட அற்புதமான படிமம் ஒரு காரணம் .கவிதையில்

கவிதைக்கடவுளின் தரிசனமும் தூக்கம் துறந்த என் பின்னிரவுகளும்( 2009 ஆண்டின் முதல் மூன்று மாதப் புதுக்கவிதைகளின் ஆய்வு.கவிதைப்பற்றிய புரிதலை உண்டாக்க கல்லூரி மாணவர்களை முன்வைத்து எழுதப்பட்டது.)

கோ.புண்ணியவான் வாசகனுக்குக் கவிதையைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் எது முகாமையான காரணியாக அமைகிறது? கருவியா? கருப்பொருளா? ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்னால் புதுக்கவிதை நம் நாட்டில் கால்பதித்தபோது அது ஏற்படுத்திய மிக முக்கியமான வினா இது?அப்போதைக்கு இதற்கான பதிலைத்தரமுடியவில்லை.ஏனெனில் மரபுக்கவிதை தன் அகன்ற சிறகை விரித்து மன்னர் ஆட்சி புரிந்து வந்தது.ஆனால் காலம் செல்லச்செல்ல இதற்கானச் சரியான பதில் கிட்டியது என்பது படைப்பிலக்கியத்துறையைக் கூர்ந்து கவனித்து வந்தவர்களுக்குத்தெரியும்.கருவியைப் பின்தள்ளிவிட்டு கருப்பொருள் தன்னை வலுவாக நிறுவிக்கொண்டது. இருப்பினும் நம் நாட்டில் புதுக்கவிதை பிறப்பெடுத்த காலத்தில் இருந்த அதன் வீச்சு பிற்காலத்தில் சூம்பிப்போனது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்கள் ஆய்வாளர்கள்.புதுக்கவிதை எழுதுவதற்கு எந்தக்கட்டுப்பாடும் தேவையில்லை என்று படைப்பாளன் சிந்தித்ததன் பலனாக கவிதை ஆற்றினுள் கசடுகள்போல மிதக்க ஆரம்பித்ததன.இப்படி வரும் கவிதைகளை காகித ஊடகங்கள் பிரசுரத்ததின் பாதிப்பாகவே இன்றைக்கு கோப்பை நிரம்பி வழிந்தோடும் அளவுக்கு, குடும்பக்கட்டுப்பாடு செய்யாத பெற்றோருக்கு

தமிழ்க்கல்வியின் அடிமடியில் கைவைக்கும் அரசின் புதிய திருத்தம் கோ.புண்ணியவான்

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவில் தமிழ்க்கல்வி மிகுந்த சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. அதன் நீட்சியாக இன்றைக்கும் வேறொரு வடிவமெடித்து தமிழ்க்கல்வியின் நிலைப்பாட்டை அச்சுருத்தி வருகிறது. மலேசியக் கல்விச்சான்றிதழ் (spm) சோதனையில் 2010 முதல் 10 பாடங்கள் மட்டுமே எடுக்கமுடியும் என அரசாங்கத்தின் அதிரடி முடிவில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய இரு பாடங்களின் மேலான மாணவர்களின் ஆர்வம் சிதைவுறும் கட்டத்தை அடைந்ததுள்ளது எப்போதுமே தமிழ் மொழி தமிழ் கற்ற பலருக்குச் சோறுபோடும் மொழியாக இருந்தது கிடையாது.( தாய் மொழியை அப்படிப் பார்ப்பதால்தான் அதன் சிதைவுக்கும் அழிவுக்கும் நாமே காரணமாகி விடுகிறோம்) மலேசியாவில் மட்டுமல்ல , சிங்கப்பூர், தமிழர்களையே கொன்று குவித்த சிரி லங்கா, ஏன் தமிழ்நாடும் அதே நிலையைத்தான் எதிர்நோக்குகிறது. தமிழ் மொழி செம்மொழி தகுதியை அடைந்த பின்னரும் தமிழகத்திலும் அதன் தலயெழுத்தை மாற்றமுடியாது இருப்பதானது தமிழுக்கே இருக்கும் தனித்த பெருமை. மலேசிக் கல்விச் சான்றிதழ் சோதனையில் கூடிய பட்சம் 10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற அரசின் அறிவிப்பையொட்டி, 12 பாடங்களாக உயர்த்த வேண்ட

அதிகாரத்துவத்தின் நீட்சியும் ஆளுமையின் வலிமையும்

கோ.புண்ணியவான் மலேசியாவின் நான்காவது பிரதமராக அரியணையமர்ந்த மஹாதிர் முகம்மது 20ம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியின் உயரிய பீடத்தில் இருந்து 2003 ஆண்டு பதவியிலிருந்து “விருப்ப” ஓய்வு பெற வேண்டியிருந்தது. மலேசியப் பிரதமர்களில் அதிக காலம் பதவியில் இருந்தவர் இவர்தான். பிரிட்டிசாரின் காலனித்துவ ஆட்சியிலிருந்து மலாயாவுக்கு விடுதலைபெறும் முயற்சியில் ஈடுட்ட முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானுடன் கருத்து மோதல் காரணமாக பலம் வாய்ந்த மலாய் இனக்கட்சியான அம்னோவிலிருந்து (UMNO-United Malayan National Organisation) நீக்கப்பட்டவர், பின்னர் பீனிக்ஸ் பறவையாய் சாம்பலைத்தட்டிவிட்டு உயிர்த்தெழுந்து மீண்டுவந்து, மிகச்சாதூர்யமான ஆளுமையாகத் தன்னை வடிவமைத்துக்கொண்டு மலேசியாவின் பிரதமராக 20 ஆண்டுகாலம் நீடித்த பெருமை இவருக்கு உண்டு. பதவிலிருந்தபோதும் அவரின் குரல் வலிமையான பலமுடையதாக இருந்ததால் மலேசியா தொழில்நுட்பத்துறையில் துரித முன்னேற்றம் கண்டது. ஓய்வு பெற்ற பிறகும் அவரின் அதிகாரக்குரலின் வலிமை நீர்த்துப்போகாமல் இருப்பது மலேசிய அரசியல் இதுவரை சந்திக்காத ஒன்று. மஹாதிருக்குப்பிறகு பிரதமராக இருந்து, கு

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும் கோ.புண்ணியவான் இறுதிப்பகுதி ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்பு தென் இந்தியர்கள் மலேசியாவுக்கு ஒப்பந்தக்கூலிகளாகக்கொண்டு வரப்பட்டார்கள் என்பது பழைய செய்தி. இன்றைக்கும் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது வேறொரு தளத்தில். தொழில்துறையில் துரித மேம்பாடு கண்டு வரும் மலேசியாவுக்கு உடல் உழைப்புத்தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். இந்தத்தேவையை நிவர்த்தி செய்ய ஆசியாவிலிருந்து நிறைய பேர் இங்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்தும் தொழிலாளர்கள் முதலாளிகளால் இங்குக் கொண்டு வரப்படுகிறார்கள். அன்றைக்கு காலணித்துவ வாதிகள் அதனைச்செய்தார்கள். இன்றைக்கு சொந்த இனமே இவர்களைக்கொண்டு வந்து சுரண்டிக்கொண்டிருக்கிறது. ‘சொந்தச்சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே’ என்று பாரதி பாடியது போலவே, மலேசியாவிலும் ஒரு கவிஞர் இந்த தமிழ் நாட்டுத்தோழர்கள் படும் வேதனையைய்பாடுகிறார். கடனுக்கும் லெவிக்கும் கட்டவே சதா எரியும் அடுப்பு நெருப்பருகில் உடல் நோக வெந்தும் உயிர் நோக நொந்தும் உழைத்ததெல்லாம் போகுமென்பது எனக்

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும் கோ.புண்ணியவான் பகுதி 5 அந்த மழை பொழுதில்தானே தோட்டத்தின் முச்சந்தி மரம் கிளைகளை உதிர்த்திருக்கும்? மரத்தில் அமர்ந்திருந்த குருவிகள் பறந்தோடிய ஓசையை மழை சிதறலின் ஓசையைவிட உன்னிப்பாகக் கேட்க முடிந்ததே! (கே.பாலமுருகன்) தமிழ்க்கல்வியைத் துடைத்தொழிக்கும் கொள்கை மலேசியா தொழில் துறை நாடாக மாறிக்கொண்டிருப்பதாலும், தொழில் நுட்பத்துறை ஆங்கிலத்தில் இயங்கிக்கொண்டிருப்பதாலும் அறிவியல் கணிதம் போன்ற பாடங்கள் ஆங்கிலத்தில் போதிப்பது அவசியமென உணர்ந்த முன்னால் பிரதமர் மகாதிர், ஆரம்பக்கல்வித்தொடங்கி பலகலைக்கழகம் வரை அப்பாடங்கள் ஆங்கில கற்றல் கற்பித்தலுக்கு மாற்றப்பட வேண்டும் என மக்கள் கவனத்தைத்திருப்பினார். நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஆரம்பப்பள்ளிகளில்( அடிப்படைக்கல்வி முதல் ஆறு ஆண்டு வரை) மலாய், ஆங்கிலப் பாடங்களைத்தவிர்த்து பிற பாடங்கள் தாய்மொழியிலேயே போதிக்கப்பட்டு வந்தன. தாய்மொழியின் மீது பற்று கொண்டவர்கள் பிரதமரின் இத்திட்டம் தமிழ் சீனம், மலாய் போன்ற மொழிகள் பேசுவதும் எழுதுவதும் குறைந்துவிடும் எனவும

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். பகுதி 4 கருத்தரங்குகள் வழி புதுக்கவிதை படைபிலக்கியத்தை மீட்டெடுத்தல் முதல் புதுக்கவிதை கருத்தரங்குக்குப்பிறகு புதுக்கவிதை படைப்பிலக்கியம் ஒரு தேக்க நிலையை அடைந்தது. இதற்குச்சில காரணங்களை முன்வைக்கலாம்: 1. மலேசியாவில் தமிழ்க்கல்வி முதல் ஆறு ஆண்டுகள் வரைதான் போதிக்கப்படுகிறது.ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகள் சிலவற்றிலும், மலாயாப்பல்கலைக்கழகத்துலும் தமிழ் போதிக்காப்பட்டாலும்,அங்கிருந்து இலக்கியப்படைப்பாளிகள் உருவாவது மிக அரிது. 2.புதுக்கவிதை எழுத வந்தவர்கள் அதன் நுணுக்கங்களைப்புரிந்து கொள்ளாமை. 3.புதுக்கவிதைகளை வளர்ப்பதாக எண்ணி தரம் பாராமல் வார மாத ஏடுகள் அவற்றைப்பிரசுரித்தது. 4.புதிதாக எழுத வருபவர்களின் ஆர்வக்கோளாறு. 5. விரிவான வாசிப்பு அனுபவம் இல்லாமை. ( நல்ல நூல்களை வாங்கிப்படிக்காமையும், தேடிப்பிடித்து படிக்காமையும்) எனப் பல காரணங்களை முன்வைக்கலாம். புதுக்கவிதை எதிர்நோக்கிய இந்தச்சரிவை நேர் செய்ய முதல் கருத்தரங்கையைக்கூட்டியவர்கள் மீண்டும் புத்தெழுச்சிபெற்று எழுந்தனர். கோ.முனியாண்டி,எம்.ஏ.இளஞ்செல்வன், கோ. புண்ணியவான், துரை.முனியாண்

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன