Skip to main content

Posts

Showing posts from July 7, 2013

கர்ண மோட்சம்

கலை சார்ந்து இயங்குபவர்கள் எப்போதுமே  ஒரு பித்த நிலையில் இருப்பார்கள். குறிப்பாக அதற்குள் அவர்கள் ஒரு தீவீரத் தன்மையை வளர்த்துக் கொண்டு, சதா அதனைப் பற்றிய சிந்தனையிலேயே லயித்துக் கிடப்பார்கள்.  அதனுள் உள்ளிறங்கிவிட்டவர்கள் ஒரு ஞானியைவிடவும் அற்புதமான கலையாற்றலை வெளிக்கொணரும் அபூர்வமான சாத்தியங்களையும்  பெற்றிருப்பர். இது கலையில் தோய்ந்த முயக்கத்தின் உண்டான முக்தி நிலை. இதற்கு வேறெங்கும் உதாரணம் தேட வேண்டாம். பாரதி ஒருவனே போதும். கலைகளில் சினிமாதான் காந்தம் கொண்டு ஈர்க்கும் விநோதச் சக்தியைக் கொண்டது. சினிமா பித்து பிடித்த பலரை நான் சந்தித்திருக்கிறேன். கலைகளில் சினிமா சார்ந்து செயல்படத்துடிக்கும் ஒருவனை ஆமைத் தன் தலையை உள்ளிழுத்துக் கொள்வதுபோல கவ்வி இழுத்துக் கொள்ளும். சதா சினிமாதான் அவன் உயிர் மூச்சாக இருக்கும். அவன் பேச்சில், அவன் உடல்மொழியில் சினிமாதான் ஆக்ரமித்து நிற்கும். “என் வேலையை விட்டுவிட்டு, நான் சினிமா இயக்குனராகப் போகிறேன்,” என்று சொன்ன ஒரு நண்பர் சொன்னபடியே நாலு இலக்க சம்பளத்தை உதறிவிட்டு சினிமாவுக்குள் நுழைந்து விட்டார். எழுபதுகளில் ஒரு பிரபல மரபுக் கவிஞர் மனைவி பிள