முத்தம் 16. ஆழிப்பெருக்கு கொடை தந்துபோன அதிசயம் வெனிஸ் நீரின் நகரம். நீரில் மிதக்கும் கடைகள் ,வீடுகள், உல்லாச விடுதிகள் மதுக்கடைகள் என நீரினுள்ளிருந்து மேலெழுந்து புதிய அதிசய நகரமாக காட்சி கொடுக்கிறது. இதே போன்ற ஒரு நகரத்தை பாரதவர்ஷத்தில், வெண்முரசு நாவலில் காட்டிச்செல்கிறார் ஜெயமோகன். ஆனால் மகாபாரதம் எழுதப்பட்ட காலத்தில் அப்படி இருந்திருக்கலாம். அல்லது அவரின் புனைவு வழி அந்த பாரதவர்ஷ நீர் நிலத்தைக் காட்டுகிறார் என்றும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் நான் வட நாட்டில் கங்கை நதியோடும் ரிசிகேஸையும்,ஹரிதுவாரையும் இரண்டு நாள் இருந்து பார்த்தேன். இன்றைக்கு அதன் நிலப்பகுதி பாரதவர்ஷத்தில் காட்டப்படுவதைவிட பெரிதாக மாறியிருக்கிறது. இன்றைய கங்கை நதியின் இரு கறைகளிலும் கட்டடங்கள், கடைகள், வீடுகள், கோயில்கள், சிவன், விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு நதிகரை நகரமாக காட்சியளிக்கிறது. ஆனாலும் வெனிஸ் போல பட்டினத்தின் குறுக்கும் நெடுக்கும் ஓடும் நூற்றுக்கணக்கான நதிகளைக் காணக்கிடைக்கவில்லை. ஒவ்வொரு நதிநீரில் ஊர்ந்து செல்லும் உல்லாசப் பயணப் படகுகள், அதனுள்ளே நிறுவப்பட்ட மது பார்கள்...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)