ஜெயகாந்தன் என் இல்லம் வந்திருந்தார் இரண்டாயிரத்தில் தொடக்கத்தில் சை . பீர் முகம்மது ஜெயகாந்தனை உங்கள் ஊருக்கு அழைத்து வருகிறேன் என்ற தகவலைச் சொன்னதும், . அவரிடம் நான் மேலதிக விபரம் கேட்க முடியாத அளவுக்கு அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தேன் சில நொடிகள் . தமிழ் எழுத்துலகின் ஒரு மாபெரும் ஆளுமை, நவீன சிந்தனையாளர், சுங்கைப் பட்டாணிக்கு வரும் வாய்ப்பு உண்டா ? நடக்கும் செயலா அது ? என்று சந்தேகத்தை கிளப்பிய வண்ணம் இருந்தது . சற்று தாமதித்தே “ உண்மையாகவா பீர் ? என்று கேட்டேன் . “ யோவ் … நான் என்ன விளையாட்டுக்கு சொல்றேன்ன்னு நெனக்கிறியா ? என்றார் . யோவ் என்று நெருங்கிய நண்பரை மட்டுமே விளிக்கும் சொல்லாகப் பயன்டுத்துவது அவரின் இயல்பு . அந்த ‘யோவில்’ எனக்கு நம்பிக்கை மலரத் துவங்கியது. நான் அதற்காகச் செயலூக்கம் பெற ஆரம்பித்தேன். மலேசியாவில் நூறு எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தேர்வு செய்து அதனை “ வேரும் விழுதுகளும் ” என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்திருந்தார் சை . பீர் . அதில் என்னுடைய ‘ நிஜம் ’ கதையும் பதிவாக...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)