மாடுகள் மலைகள் ஏரிகள் ~2 கோல்ட் கோஸ்டில் என்ன மணி என்று தெரியவில்லை. நேரம் தெரியாமல் இருப்பதுதான் கொண்டாட்ட மனநிலையை உண்டாக்குகிறது. ஆம் நாங்கள் உல்லாசமாக இருக்கத்தானே புதிய ஊரைத் தேர்ந்தெடுத்தோம். நியூசிலாந்து நேரத்துக்கு மணியை மாற்றியும் வைக்கவில்லை . அவர்களுக்கும் நமக்கும் ஐந்து மணி நேர வித்தியாசம். நமக்கு இங்கே காலை ஆறு என்றால் அங்கே பதினொன்று. அது ஒன்றரை மணி நேர நிறுத்தம். கோல்ட் கோஸ்ட்டில் இறங்குபவர்களுக்காக மட்டுமல்ல . பெட்றோல் நிரப்பவும்தான். அங்கே எல்லாப் பயணிகளும் சுங்கப் பரிசோதனைக்கு ஆளாக்கப் படுகிறார்கள. போதைப்பொருள் , ஆயுதக் கடத்தல் நடக்காமல் இருக்க இந்தப் பரிசோதனை. போதைப்பொருள் கடத்தலுக்கு கடுமையான தண்டனை என்று எச்சரிக்கிறார்கள். கோல்ட் கோஸ்ட்டில் சுங்கச் சாவடியில் பொருள் வாங்கலாம், காப்பி அருந்தலாம் ஆனால் அமெரிக்கன் டாலர் கேட்கிறார்கள். நியூசிலாந்து பணத்தை வாங்க மறுக்கிறார்கள். ஆங்கிலமும் டாலரும் உலகத்தை அடிமையாக்கி விட்டிருக்கிறது. மீண்டும் விமானத்துக்குள் நுழைந்தால் புதிய பணிப்பெண்கள் ம...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)