கடந்த மாதம் 3 நாள் விடுமுறையைக்கழிக்க மலேசிய திரங்கானு மாநிலக்கடற்கரைக்கு அப்பால் அமைந்துள்ள லாங் தெங்ஙா தீவுக்கு குடும்பதோடு சென்றிருந்தோம். முதல் நாள் நள்ளிரவு சுங்கைப்பட்டாணியிருந்து புறப்பட்டோம். நள்ளிரவு கார் பயணத்தில் எனக்கு மிகுந்த ஒவ்வாமை உண்டு. தூக்க நேரத்தில் விடிய விடிய கார் ஓட்டுவது எவ்வளவு ஆபத்தானது என்று நினைக்கும்போது ஒவ்வாமை கூடுதலாகிவிடும்.அதிலும் கைக்குழந்தைளோடு பயணத்தை மேற்கொள்வது மனதை கலங்கடித்துவிடும். என் ஊர் சுங்கைப்பட்டாணி, மலாயா தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.திரங்காணு நேரெதிர் முனையில் கிழக்குக்கடற்கரையில் அமைந்துள்ளது. குறுக்குவெட்டாக பயணிக்கத்தோதுவாக மலைத்தொடர்களை ஊடுறுத்துச்செல்லும் அழகிய சாலைகள் போடப்பட்டுள்ளன. ஏழு மணி நேரப்பயணம். நடுவே நீண்ட தூரத்துக்கு அடர்ந்த ரம்மியமான காடுகள். காடுகளை இருப்பிடமாகக்கொண்ட பலவகை மிருகங்களையும் பார்த்துக்கொண்டே பயணிக்கும் பீதி கலந்த இன்ப அதிர்ச்சிகளோடு பயணிக்கும் அனுபவத்தை சொல்லில் அடக்க முடியாது. ஒருமுறை ஊட்டியிலிருந்து பெங்களூருக்குப்பயணம் மேற்கொள்ளும்போதும் இதுபோன்ற அனுபவம் உ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)