இவன்தான் ஆக இளையவன் -சூர்யா என் வீடு குழந்தைகள் நிறைந்த வீடு. என் மகள் என் மகன் வழிப்பிள்ளைகள் மொத்தம் ஐவர். 'நாம் அறுவரானோம்' எனும் பிரகடனத்தோடு என் இளைய மகன் குழந்தை இந்த டிசம்பரில் இவ்வுலகம் காண வருகிறது. வருக வருகவென வரவேற்கக் காத்திருக்கிறோம் எல்லாரும். குழந்தைகள் இருக்கும் உலகம் குடும்பங்களுக்குப் புதிதல்ல என்றாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகள் ப்ற்றிச் சொல்வதற்கு எண்ணிக்கையற்ற கதைகள் வற்றாத நதிபோல சம்பவங்களால் நிறைந்து கொண்டேதான் இருக்கின்றது. அவை சுவையானவை- சுகமானவை . திகட்டத் திகட்ட உண்ணச்சொல்லும் சொல் உணவு நிறைந்தவை. ஆகக் கடைசி பேரனுக்கு இப்போதுதான் இரண்டு வயதைத் தாண்டுகிறது. அவன் இரண்டு வயதுக்குள் சில சொற்களை சொல்ல ஆரம்பித்துவிட்டான்.குழந்தைகளற்ற வீட்டை விட , அவை இருக்கும் வீட்டில் பேச்சு சீக்கிரம் பிடிபட்டு விடும் மழலைகளுக்கு. காதுகள்தான் சொற்களை உள்வாங்கி சேகரம் செய்து மூளை முதிர்ச்சி பெறும...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)